Loading...
மார்க் ஜுக்கர்பெர்க்கின் புதிய Muse Charm AI கேட்ஜெட்: கசிந்த விலை, இலவச 5G டேட்டா மற்றும் சிறப்பம்சங்கள்
மார்க் ஜுக்கர்பெர்க்கின் புதிய Muse Charm AI கேட்ஜெட் விலை விவரம் கசிவு

மார்க் ஜுக்கர்பெர்க்கின் புதிய Muse Charm AI கேட்ஜெட்: கசிந்த விலை, இலவச 5G டேட்டா மற்றும் சிறப்பம்சங்கள்

எழுதியவர் Sekar Chinnappan
Nov 20, 2026
11:50 am

செய்தி முன்னோட்டம்

மெட்டா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் தனது நிறுவனத்தின் முதல் ஏஐ வன்பொருள் சாதனத்தை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறார். 'மியூஸ் சார்ம்' (Muse Charm) என பெயரிடப்பட்டுள்ள இந்தப் பாக்கெட் அளவிலான சாதனம் அடுத்த மாதம் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் இதன் விலை சுமார் $300 அதாவது இந்திய மதிப்பில் ₹28,000 ஆக இருக்கும் எனத் தகவல்கள் கசிந்துள்ளன. மேலும் வெரிசோன் நிறுவனம் மூலமாக 12 மாதங்களுக்கு இலவச 5G டேட்டா சலுகையும் வழங்கப்பட உள்ளது. உள்ளமைக்கப்பட்ட 5G மோடம் இருப்பதால் ஸ்மார்ட்போன் இணைப்பு இன்றியே இந்தக் கருவி தனித்து செயல்படும்.

சென்சார்

2-இன்ச் தொடுதிரை, கைரேகை சென்சார் மற்றும் 'Jolly' டிஜிட்டல் அவதார் சிறப்பம்சங்கள்

மியூஸ் சார்ம் என்பது ஏர்பாட்ஸ் கேஸ் அளவிலான ஒரு சிறிய பெண்டன்ட் வடிவக் கையடக்க சாதனமாகும்.

கீசெயின் அல்லது பாக்கெட்டில் எளிதாக வைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இதில் இரண்டு இன்ச் தொடுதிரை பொருத்தப்பட்டுள்ளது.

அத்துடன் உள்ளமைக்கப்பட்ட ஸ்பீக்கர்கள், மைக்ரோஃபோன்கள் மற்றும் பாதுகாப்புக்காக கைரேகை சென்சார் ஆகியவையும் வழங்கப்பட்டுள்ளன.

இதன் திரையில் 'ஜாலி' (Jolly) என்று அழைக்கப்படும் தனிப்பயனாக்கக்கூடிய டிஜிட்டல் அவதார் தோன்றி பயனர்களுடன் உரையாடும்.

இது ஜப்பானிய டிஜிட்டல் செல்லப்பிராணி பொம்மையான டமாகோட்சியை நினைவூட்டும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

ஏஐ ஏஜென்ட்

ஆன்லைன் ஷாப்பிங் முதல் விமான டிக்கெட் முன்பதிவு வரை செய்து முடிக்கும் ஏஐ ஏஜென்ட்

இந்த சாதனம் வெறும் பேச்சுத் துணை மட்டுமின்றி பயனர்களின் அன்றாடப் பணிகளை செய்து முடிக்கும் திறன் கொண்டது.

ஸ்மார்ட்போனைத் திறக்காமலேயே ஆன்லைன் ஷாப்பிங் செய்தல், விமான டிக்கெட் முன்பதிவு மற்றும் படிவங்களை நிரப்புதல் போன்றவற்றை இது எளிதாக செய்யும்.

கடந்த செப்டம்பர் மாதம் நடந்த மெட்டா கனெக்ட் நிகழ்வில் மார்க் ஜுக்கர்பெர்க் இதனை முதன்முறையாக காட்சிப்படுத்தினார்.

மேலும் மெட்டா தனது ஸ்மார்ட்வாட்ச் வெளியீட்டை 2027-க்குத் தள்ளிவைத்துவிட்டு இக்கருவியின் வெளியீட்டில் முழு கவனம் செலுத்துகிறது.

ADVERTISEMENT

சந்தை போட்டி

போட்டி ஏஐ சாதனங்களின் விலை நிலவரமும் ஓபன்ஏஐ, நத்திங் நிறுவனங்களின் திட்டங்களும்

வரும் டிசம்பர் மாதம் அமெரிக்காவில் வெளியாகவுள்ள இக்கருவி மற்ற நாடுகளில் எப்போது கிடைக்கும் என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

$300 விலையில் வரும் மியூஸ் சார்ம், போட்டி நிறுவனங்களான ஃப்ரெண்ட் ($250) மற்றும் அமேசான் பீ ஃபிரான்டியர் ($75) ஆகியவற்றை விட விலை அதிகமானது.

இதற்கிடையே நத்திங் நிறுவனம் ஏஐ வாய்ஸ் ரெக்கார்டரையும், ஓபன்ஏஐ நிறுவனம் ஸ்மார்ட் ஸ்பீக்கரையும் உருவாக்கி வருகின்றன.

முந்தைய ஹியூமன் ஏஐ பின் மற்றும் ராபிட் ஆர்1 சாதனங்கள் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யாத நிலையில் மியூஸ் சார்ம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT