மகிளா சம்மான் சேமிப்பு திட்டம் - 7.5% வட்டியில் எப்போது கிடைக்கும்?
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் 2023 தாக்கல் செய்கையில், சேமிப்பு திட்டங்களில் பெண்களுக்காக புதிய மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழையும் அறிவித்து இருந்தார். இது ஒரு புதிய சிறு சேமிப்புத் திட்டமாகும். மகிளா சம்மான் திட்டம் 2 வருட காலத்திற்கு பெண்கள் அல்லது சிறுமிகளின் பெயரில் ரூ.2 லட்சம் வரை டெபாசிட் வசதியை வழங்குகிறது. இத்திட்டத்தில் 2 ஆண்டுகளுக்கு 7.5 சதவீத நிலையான வட்டி விகிதத்தில் பகுதியளவு திரும்பப் பெறும் விருப்பத்துடன் வருகிறது. இந்தத் திட்டம் ஆனது ஏப்ரல் 1, 2023 முதல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெண்களுக்கான மகிளா சம்மான் சேமிப்பு திட்டத்தின் நன்மைகள் என்னென்ன?
மேலும் நாடு முழுவதும் உள்ள வங்கிகள் அல்லது தபால் நிலையங்கள் மூலம் இத்திட்டம் செயல்படும். அனைத்து பெண்களும் இத்திட்டத்தில் முதலீடு செய்து நல்ல லாபத்தை அடையலாம். 2 லட்சம் முதலீடு செய்தால் இரண்டு ஆண்டுகளில் ரூபாய் 31,125 வட்டித் தொகையாக பெற முடியும். இந்த திட்டம் PPF க்கு இணையாக வட்டி விகிதத்தை தரும் சேமிப்பு திட்டமாக உள்ளது. கடைசியாக, இந்த திட்டம் 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை மட்டுமே நடைமுறையில் இருக்கும். திட்டதின்படி முதிர்வு காலம் முடிவதற்குள் பாதியில் எடுத்து கொள்வதற்கான வசதிகளும் உள்ளன.