சுகன்யா சம்ரிதி யோஜனா 2023 திட்டம் - ரூ.250 முதலீட்டில் 65 லட்சம் பலன்
சுகன்யா சம்ரித்தி யோஜனா 2023 சேமிப்பு திட்டம் ஆனது, ஒரு பெண் குழந்தையின் பெற்றோரை இலக்காகக் கொண்ட சிறந்த முதலீட்டு விருப்பங்களில் ஒன்றாகும். இந்த சேமிப்பு திட்டத்தை பெற்றோர் அல்லது பாதுகாவலர் மூலம் ஆரம்பித்துக் கொள்ளலாம். ஒரே குடும்பத்தில் அதிகபட்சம் இரண்டு பெண் குழந்தைகள் இந்த திட்டத்தை தொடங்கி, அதன் பலனைப் பெறலாம். இந்த திட்டம் ஒரு ஆண்டில் குறைந்தபட்ச தொகையாக ரூ.250, அதிகபட்ச தொகையாக ரூ.1லட்சத்து 50 ஆயிரம் செலுத்தலாம். மேலும், 50 ரூபாய்களின் மடங்கிலும் தங்களுடைய எஸ்.எஸ்.ஒய் கணக்கில் வரவு வைத்துக் கொள்ளலாம். உதாரணத்திற்கு ரூ.300, 350, 400, 450 என பணத்தை செலுத்தலாம். இந்தக் கணக்கு தொடங்கி 15 வருடம் வரை இவ்வாறு நாம் வரவு வைத்து கொள்ளலாம்.
சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம் - சிறிய முதலீட்டில் பெரிய பலன்கள்
தொடர்ந்து, சுகன்யா சம்ரித்தி கணக்கு தற்போது 7.6 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. எனவே, கணக்கு தொடங்கப்படும் பெண் குழந்தையின் 18 வயது வரை இந்த கணக்கு அவர்களது பெற்றோர் அல்லது பாதுகாவலராலும், 18 வயது பூர்த்தியான பிறகு அவர்களால் சுயமாகவும் கணக்கில் வரவு, செலவை மேற்கொள்ளலாம். அதேப்போன்று, கணக்கு தொடங்கி 5 வருடம் முடிந்த பிறகு மருத்துவ செலவிற்காக கணக்கை முடித்து பணத்தை பெற்றுக் கொள்ளலாம். ஒருவேளை குழந்தைக்கு வயது 18 கடந்து இருந்தாலும் செலுத்திய தொகையில் 50 சதவீதத்தை தன் மேற்படிப்பிற்காக எடுத்துக் கொள்ளலாம். சுகன்யா சம்ரித்தி திட்டத்திற்கான குறைந்தபட்ச வைப்புத் தொகை ஆண்டுக்கு ரூ. 250 ஆகவும், அதிகபட்ச தொகை ஒரு நிதியாண்டில் ரூ. 1,50,000 ஆகவும் இருக்கும்.