Loading...
கூகுள் பிக்சல் 11 சீரிஸ் இன்று அறிமுகம்: நேரம், நேரலை மற்றும் சிறப்பம்சங்கள்
பிக்சல் 11 தொடரை இன்று நடைபெறும் Made by Google நிகழ்வில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்த உள்ளது Google

கூகுள் பிக்சல் 11 சீரிஸ் இன்று அறிமுகம்: நேரம், நேரலை மற்றும் சிறப்பம்சங்கள்

எழுதியவர் Venkatalakshmi V
Aug 12, 2026
04:29 pm

செய்தி முன்னோட்டம்

கூகுள் நிறுவனம் தனது புதிய முதன்மை ஸ்மார்ட்போன் வரிசையான பிக்சல் 11 தொடரை இன்று நடைபெறும் Made by Google நிகழ்வில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்த உள்ளது. இத்துடன் புதிய கூகுள் ஸ்மார்ட்வாட்ச் மற்றும் பிக்சல் பட்ஸ் சாதனங்களும் அறிமுகம் செய்யப்படவுள்ளன. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஆகஸ்ட் 12, 2026 அன்று இந்த அறிமுக நிகழ்வு நடைபெறுகிறது. இந்திய நேரப்படி ஆகஸ்ட் 13-ஆம் தேதி அதிகாலை 3:30 மணிக்கு இந்நிகழ்வு தொடங்கும். கூகுளின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல் வழியாக உலகெங்கிலும் உள்ள மக்கள் இந்த நேரலையை கண்டு ரசிக்கலாம்.

பிக்சல் 11 புரோ போல்ட்

கூகுள் பிக்சல் 11 புரோ போல்ட் சிறப்பம்சங்கள்

புதிய மடிக்கக்கூடிய மாடலான பிக்சல் 11 புரோ போல்ட், 120Hz புதுப்பிப்பு விகிதம் கொண்ட 8-இன்ச் முதன்மை OLED திரையையும், 6.4-இன்ச் வெளிப்புற OLED திரையையும் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூகுளின் புதிய Tensor G6 பிராசஸர் மற்றும் டைட்டன் எம்3 பாதுகாப்பு சிப் மூலம் இது இயங்கும்.

12ஜிபி மற்றும் 16ஜிபி ரேம் தேர்வுகளுடனும், 256ஜிபி முதல் 1டிபி வரையிலான சேமிப்புத் திறனுடனும் ஆண்ட்ராய்டு 17 இயங்குதளத்தில் இது அறிமுகமாகிறது.

விவரங்கள்

கேமரா, பேட்டரி திறன் மற்றும் எதிர்பார்க்கப்படும் விலை விவரங்கள்

கேமராவைப் பொறுத்தவரை, 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 10.5 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் 5x ஆப்டிகல் ஜூம் கொண்ட 10.8 மெகாபிக்சல் டெலிபோட்டோ கேமரா ஆகியவை இடம்பெறவுள்ளன.

மேலும், இரு திரைகளிலும் 10 மெகாபிக்சல் செல்ஃபி கேமராக்கள் வழங்கப்படலாம்.

இதில் 30W வயர்டு சார்ஜிங் மற்றும் Qi2 வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுடன் 4,806mAh பேட்டரி வழங்கப்பட வாய்ப்புள்ளது.

அமெரிக்காவில் இதன் தொடக்க விலை $1,899 (இந்திய மதிப்பில் சுமார் ₹1,59,000) ஆகவும், ஐரோப்பியச் சந்தைகளில் EUR 1,999 ஆகவும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஏழாண்டுகளுக்கான இயங்குதள மாற்றங்கள் மற்றும் பாதுகாப்பு புதுப்பிப்புகளை கூகுள் நிறுவனம் இந்த போனுக்கு உறுதி செய்துள்ளது.

ADVERTISEMENT