
2000 பேருக்கு வேலை! நிசான் கார் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்;
செய்தி முன்னோட்டம்
ஒரகடத்தில் இயங்கி வரும் நிசான் கார் தயாரிப்பு ஆலை விரிவாக்கத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று நடைப்பெற்றது.
இந்த ஒப்பந்தத்திற்கு சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்திட்டார்.
நிசான் நிறுவனம் ஒரு ஜப்பானியப் பன்னாட்டுத் தானுந்து உற்பத்தி நிறுவனம் ஆகும்.
இவை, நிசான் என்னும் சுருக்கப் பெயரால் அறியப்படுகிறது. இதன் தலைமையகம் யொக்கொகாமாவில் உள்ள நிசிக்கு என்னும் இடத்தில் அமைந்துள்ளது.
இந்நிலையில், சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்திலுள்ள ஹோட்டல் லீலா பேலஸில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், இன்று தமிழ்நாடு அரசுக்கும், நிசான் நிறுவனத்துக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்ததில் ஸ்டாலின் கையெழுத்திட்டார்.
இதன் மூலம் ரூ.3,300 கோடி முதலீடு ஒப்பந்த்தில், சுமார் 2000 பாருக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
நிசான் நிறுவனத்துடன் ஒப்பந்தம்
#BREAKING | தமிழ்நாட்டில் ₹5300 கோடி முதலீடு செய்யும் நிசான் நிறுவனம்!#SunNews | #TamilNadu | #Nissan | @mkstalin pic.twitter.com/QWdOhecREk
— Sun News (@sunnewstamil) February 13, 2023