மீண்டும் விற்பனைக்கு வரும் ரெனால்ட் மற்றும் நிசான் மாடல்கள்!
பிரெஞ்சு கார் தயாரிப்பு நிறுவனமான ரெனால்ட் மற்றும் ஜப்பானிய ஆட்டோ ஜாம்பவானான நிசான் ஆகியவை இந்திய சந்தையில் மூன்று மாடல்களை உருவாக்கி வருகின்றனர். இதில், ரெனால்ட் டஸ்டர், ரெனால்ட் ட்ரைபர் மற்றும் நிசானின் எம்பிவி எலெக்ட்ரிக் வாகனம் ஆகியவை அடங்கும். இந்த தயாரிப்பு திட்டத்திற்கு இரு நிறுவனங்களும் சுமார் ரூ.4000 கோடி முதலீடு செய்ய உள்ளது. இதில் புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் கார் (மூன்றாவது தலைமுறை) வரும் 2024-2025ஆம் ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரெனால்ட் டஸ்டர் எப்படி இருக்கும்? CMF-B மாடுலர் பிளாட்பார்ம் அடிப்படையில் உருவாக்கப்படுகிறது.டாசியா பிக்ஸ்டர் கான்செப்ட் போலவே, ரெனால்ட் டஸ்டர் காரின் டிசைன் இருக்கலாம் என கருதப்படுகிறது.
ரெனால்ட் மற்றும் நிசான் நிறுவனத்தின் புத்தம் புதிய மாடல் கார்கள் மீண்டும் வருகிறது!
நிசான் நிறுவனத்தின் புதிய 7 சீட்டர் எம்பிவி காரிலும் இதே பிளாட்பார்ம் தான் பயன்படுத்தப்படவுள்ளது. வசதிகளாக, பெரிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் வயர்லெஸ் செல்போன் சார்ஜர் போன்ற அம்சங்கள் இடம்பெறலாம். 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் கொண்டுள்ளது. மேலும், ரெனால்ட் டஸ்டர் காரின் க்ரவுண்ட் க்ளியரன்ஸ் அதிகமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதுடன், ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொடுக்கப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, இந்தியாவில் தற்போது ரெனால்ட் டஸ்டர் கார் விற்பனையில் இல்லை. ஏற்கனவே அதன் விற்பனை நிறுத்தப்பட்டு விட்டது. இந்த சூழலில் ரெனால்ட் டஸ்டர் கார் மீண்டும் விற்பனைக்கு வரவிருப்பது, அதன் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.