மார்ச் 2023 இறுதிக்குள் ஆதாருடன் இணைக்கப்படாவிட்டால், உங்கள் பான் கார்டு செயலிழந்துவிடும்: வருமானவரித் துறை
சென்ற சனிக்கிழமை வருமான வரித்துறை வெளியிட்ட அறிக்கையின் படி, மார்ச் 31, 2023க்கு முன், பான் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம். அப்படி இணைக்கப்படாவிட்டால், அந்த பான் எண், ஏப்ரல் 1, 2023 முதல் செயல்படாது. "விலக்கு வகையின் கீழ் வராத அனைத்து பான் வைத்திருப்பவர்களும், மார்ச் 31, 2023க்கு முன், தங்கள் பான் எண்ணை, ஆதாருடன் இணைப்பது கட்டாயமாகும். ஏப்ரல் 1, 2023 முதல், இணைக்கப்படாத பான் எண் செயலற்றதாக மாறும். இது கட்டாயம், அவசியம். தாமதிக்காதே, இன்றே இணைக்கவும்!" என தெரிவித்து இருக்கிறது. விலக்கு அளிக்கப்பட்டவர்கள் தவிர அனைவருக்கும் இது பொருந்தும், என வருமான வரித்துறை மேலும் வலியுறுத்தியுள்ளது.
மார்ச் 2023 இறுதிக்குள் ஆதாருடன், பான் கார்டு இணைக்கப்படவேண்டும்
ஆதார்- பான் இணைப்பு
மே 2017 இல், மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, 'விலக்கு அளிக்கப்படுபவர்கள்': அசாம், ஜம்மு-காஷ்மீர் மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்களில் வசிக்கும் நபர்கள், வருமான வரிச் சட்டம், 1961-ன் படி நாட்டில் வாசிக்காதவர், குடியுரிமை பெறாதவர், 80 வயது அல்லது அதற்கு அதிகமான வயதுடைவார்கள். மீறினால், ஏப்ரல் 1, 2023க்குப் பிறகு, செயல்படாத பான் எண்ணை பயன்படுத்தி, I-T வருமான வரி தாக்கல் செய்ய முடியாது; செயல்படாத பான்களுக்கு நிலுவையில் உள்ள வரி பணத்தைத் திரும்பப் பெற முடியாது; சில நேரங்களில் உங்களது பேங்க் செயல்பாடும் முடக்கப்படலாம். எனவே உடனடியாக. வருமான வரித்துறை இணையதளத்தில், 1000 ரூபாய் கட்டணத்தைச் செலுத்தி பான் கார்டை, ஆதாருடன் இணைக்கவும்.