சந்திரயான்-3 திட்டத்திற்கு பின்னால் இருக்கும் முக்கிய நபர்கள்
திட்டமிட்டிருந்தபடி சரியாக நண்பகல் 2.35 மணிக்கு விண்ணில் பாய்ந்தது சந்திரயான்-3 விண்கலத்துடன் விண்ணில் பாயந்தது LVM3 ராக்கெட். இந்தியாவின் பெருமைமிகு சந்திரயான்-3 திட்டத்தின் பின்னால் இருக்கும் முக்கிய நபர்கள் யார்? சந்திரயான்-3 திட்டத்தின் பின்னாள் இருக்கும் முக்கியமான நபர் இஸ்ரோவின் தலைவர் சோம்நாத். இஸ்ரோவின் தலைவராக இணைவதற்கு முன், இஸ்ரோவின் ராக்கெட்டுகளை வடிவமைக்கும் மிக முக்கிய நிறுவனங்களான விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் மற்றும் லிக்விட் ப்ரொபல்ஷன்ஸ் சிஸ்டம் சென்டர் ஆகிய அமைப்புகளின் இயக்குநராக செயல்பட்டு வந்திருக்கிறார் சோம்நாத். சந்திரயான்-3 திட்டத்திற்குப் பின்னால் இருக்கும் முக்கியான நபர்களுள் ஒருவர் அதன் திட்ட இயக்குநரான செயல்பட்ட முத்துவீரவேல். இஸ்ரோவில் 30 வருட அனுபவம் கொண்ட இவர், தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
54 பெண் பொறியாளர்கள் பங்களிப்பு
விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குநரான உன்னிகிருஷ்ணன் நாயர், சந்திரயான்-3 திட்டத்தில் பெரும்பங்காற்றியிருக்கிறார். சந்திரயான்-3 விண்கலத்தை விண்ணுக்கு எடுத்தச் சென்ற LVM3 ராக்கெட்டின் உருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றியவர். மேலும், LVM3 ராக்கெட்டின் முதல் நிலை பூஸ்டர்களான S200-ஐ முழுவதுமாக உருவாக்கியது மேம்படுத்தியதும் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் தலைவராக, உன்னிகிருஷ்ணன் இருந்தபோது தான். திட்ட இயக்குநரான முத்துவீரவேலைத் தொடர்ந்து, பணி இயக்குநரான மோகன் குமாரும் சந்திரயான்-3 திட்டதின் மேம்பாட்டில் முக்கியப் பங்காற்றியிருக்கிறார். சந்திரயான்-3 திட்டத்தில் மேம்பாட்டில் 54 பெண் பொறியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் நேரடியாகப் பங்காற்றியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.