NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / இந்தியாவின் முதல் AI ஆசிரியை 'ஐரிஸ்', கேரளா பள்ளியில் அறிமுகம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவின் முதல் AI ஆசிரியை 'ஐரிஸ்', கேரளா பள்ளியில் அறிமுகம் 
    மேக்கர்லேப்ஸ் எடுடெக் பிரைவேட் லிமிடெட் உடன் இணைந்து உருவாக்கப்பட்டது, ஐரிஸ்

    இந்தியாவின் முதல் AI ஆசிரியை 'ஐரிஸ்', கேரளா பள்ளியில் அறிமுகம் 

    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 06, 2024
    03:32 pm

    செய்தி முன்னோட்டம்

    கல்வியில் முன்னேற்றம் அடைந்துள்ள கேரளா மாநிலம், அதன் முதல் ஜெனரேட்டிவ் AI ஆசிரியரான ஐரிஸை அறிமுகப்படுத்தி, மற்றொரு புதுமையான நடவடிக்கையை எடுத்துள்ளது.

    மேக்கர்லேப்ஸ் எடுடெக் பிரைவேட் லிமிடெட் உடன் இணைந்து உருவாக்கப்பட்டது, ஐரிஸ்.

    கல்வியில் செயற்கை நுண்ணறிவை ஒருங்கிணைப்பதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.

    திருவனந்தபுரத்தில் உள்ள KTCT மேல்நிலைப் பள்ளியில் வெளியிடப்பட்ட ஐரிஸ் ரோபோ, மாணவர்களுக்கான கற்றல் அனுபவத்தை மேம்படுத்த வடிவமைக்கப்பட்ட ஒரு மனித உருவம் கொண்ட ரோபோ

    மேக்கர்லேப்ஸ், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஐரிஸின் வீடியோவைப் பகிர்ந்து,"IRIS உடன், உண்மையான தனிப்பயனாக்கப்பட்ட கற்றல் அனுபவத்தை உருவாக்க AI இன் ஆற்றலைப் பயன்படுத்தி கல்வியில் புரட்சியை ஏற்படுத்த நாங்கள் புறப்பட்டுள்ளோம்" என்று பதிவிட்டுள்ளனர்.

    அடல் டிங்கரிங் லேப்

    மத்திய அரசின் உதவியுடன் தொடங்கப்பட்ட ATL

    NITI ஆயோக்கால் தொடங்கப்பட்ட அடல் டிங்கரிங் லேப் (ATL) திட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்ட ஐரிஸ், பாரம்பரிய கற்பித்தல் முறைகளில் புரட்சியை ஏற்படுத்தும் நோக்கில் பல்வேறு அம்சங்களைக் கொண்டுள்ளது.

    மூன்று மொழிகளைப் பேசும் திறன் மற்றும் சிக்கலான கேள்விகளைச் சமாளிக்கும் திறனுடன், ஒவ்வொரு மாணவருக்கும் தனிப்பயனாக்கப்பட்ட கற்றல் அனுபவத்தை ஐரிஸ் வழங்குகிறது.

    அதன் அம்சங்களில், குரல் உதவி, ஊடாடும் கற்றல் தொகுதிகள், கையாளுதல் திறன்கள் மற்றும் இயக்கம் ஆகியவை அடங்கும்.

    இது வகுப்பறையில் ஒரு விலைமதிப்பற்ற சொத்தாக அமைகிறது.

    மேக்கர்லேப்ஸ், ஐரிஸை ஒரு ரோபோவை விட அதிகமாகக் கருதுகிறது.

    இது, கல்விச் சூழலுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட ஒரு புதுமையான வாய்ஸ் அசிஸ்டன்ட் ஆகும்.

    ரோபாட்டிக்ஸ் மற்றும் ஜெனரேட்டிவ் AI தொழில்நுட்பங்களால் இயக்கப்படுகிறது இந்த ஐரிஸ்.

    embed

    முதல் AI ஆசிரியை

    இந்தியாவின் முதல் AI ரோபோ ஆசிரியர் 'IRIS' கேரளாவில் அறிமுகம்! 🔹திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், Makerlabs Edutech நிறுவனம் உருவாக்கிய AI ஆசிரியர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது 🔹பல்வேறு பாடங்களில் இருந்து சிக்கலான கேள்விகளுக்கு பதிலளிக்கவும், Voice Assistance... pic.twitter.com/qWUxFuN438— Spark Media (@SparkMedia_TN) March 6, 2024

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கேரளா
    செயற்கை நுண்ணறிவு

    சமீபத்திய

    மே 17இல் தொடங்குகிறது ஐபிஎல் 2025; ஆறு மைதானங்களில் மட்டும் போட்டி; ஜூன் 3இல் ஃபைனல் ஐபிஎல் 2025
    IACCS: இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் வான் பாதுகாப்பு வெற்றியின் முதுகெலும்பு இவர்கள்தான் ஆபரேஷன் சிந்தூர்
    கூகுள் பேடிஎம் உள்ளிட்ட யுபிஐ சேவை முடங்கியதால் பொதுமக்கள் அவதி யுபிஐ
    இது போருக்கான சகாப்தம் அல்ல.. ஆனால்.. பிரதமர் மோடி உரையின் முக்கிய அம்சங்கள் பிரதமர் மோடி

    கேரளா

    கேரளாவில் கடத்தப்பட்ட 6 வயது சிறுமி 20 மணிநேர தேடுதலுக்கு பிறகு மீட்பு  கடத்தல்
    உயர்கல்வியில் இஸ்லாமியர்களின் சேர்க்கை 2021ல் 8.5%க்கு மேல் குறைந்துள்ளது: அறிக்கை இந்தியா
    'கேரள ஆளுநர் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்?': உச்ச நீதிமன்றம்  உச்ச நீதிமன்றம்
    காதலியை கொன்று, அதை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸாக வைத்த நபரால் சென்னையில் பரபரப்பு  சென்னை

    செயற்கை நுண்ணறிவு

    நவம்பர் 9-ல் அறிமுகமாகிறது ஸ்மார்ட்போனுக்கு மாற்று எனக் கூறப்படும் புதிய 'AI பின்' சாதனம் கேட்ஜட்ஸ்
    புதிய மேம்படுத்தப்பட்ட 'GPT-4 டர்போ' AI சாட்பாட்டை அறிமுகப்படுத்தியிருக்கிறது ஓபன்ஏஐ சாட்ஜிபிடி
    டெவலப்பர்கள் மாநாட்டில் ஓபன்ஏஐ நிறுவனம் வெளியிட்ட முக்கிய அறிமுகங்கள் மற்றும் அறிவிப்புகள் சாட்ஜிபிடி
    தங்கள் AI கருவிகளில் அரசியல் உள்ளடக்கங்களை உருவாக்குவதைத் தடை செய்த மெட்டா மெட்டா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025