LOADING...
பெற்றோரே கைவிட்ட குட்டி டைனோசர்கள்! பெரிய டைனோசர்களுக்கு இவைதான் ஈஸி ஸ்நாக்ஸ்! ஜூராசிக் காலத்தின் கொடூரமான உணவுச் சங்கிலி!
ஜூராசிக் காலத்தில் குட்டி டைனோசர்களை உண்டு வாழ்ந்த பெரிய டைனோசர்கள்

பெற்றோரே கைவிட்ட குட்டி டைனோசர்கள்! பெரிய டைனோசர்களுக்கு இவைதான் ஈஸி ஸ்நாக்ஸ்! ஜூராசிக் காலத்தின் கொடூரமான உணவுச் சங்கிலி!

எழுதியவர் Sekar Chinnappan
Feb 01, 2026
07:16 pm

செய்தி முன்னோட்டம்

ஜூராசிக் காலம் என்றாலே நம் நினைவுக்கு வருவது பிரம்மாண்டமான டைனோசர்கள்தான். ஆனால், சமீபத்திய ஆய்வின்படி, அந்தப் பிரம்மாண்டமான நீண்ட கழுத்து டைனோசர்களின் குட்டிகள், அந்த காலத்து வேட்டை விலங்குகளுக்கு மிக எளிதான மற்றும் முதன்மையான உணவாக இருந்தன என்பது தெரியவந்துள்ளது. லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி நடத்திய இந்த ஆய்வு, ஜூராசிக் காலத்து உணவுச் சங்கிலி எவ்வளவு கொடூரமானது என்பதை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது.

ஏன்?

ஏன் பெற்றோர் தங்கள் குட்டிகளைக் கைவிட்டனர்?

டிப்ளோடோகஸ் மற்றும் பிராக்கியோசொரஸ் போன்ற ராட்சத டைனோசர்கள் தங்கள் குட்டிகளைப் பாதுகாப்பதில்லை. இதற்கான காரணங்கள் வியப்பளிக்கின்றன: உடல் அமைப்பு: பல டன் எடை கொண்ட இந்த டைனோசர்களின் முட்டைகள் வெறும் 12 அங்குல அகலமே இருந்தன. குட்டிகள் பிறந்தவுடன் மிகச் சிறியதாக இருந்ததால், பிரம்மாண்டமான பெற்றோர் அவற்றின் அருகே நின்றாலே குட்டிகள் மிதிபட்டு இறந்துவிடும் அபாயம் இருந்தது. கடல் ஆமை போன்ற வாழ்க்கை: இன்றைய கடல் ஆமைகளைப் போலவே, இந்த டைனோசர்களும் முட்டையிட்டுவிட்டுச் சென்றுவிடும். பிறந்த குட்டிகள் தானாகவே காடுகளில் வளர்ந்து பிழைக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தன.

உயிர்நாடி

காயமடைந்த வேட்டைக்காரர்களின் உயிர்நாடி

அலோசொரஸ் போன்ற கொடூரமான வேட்டை டைனோசர்களுக்கு, இந்தத் தற்காப்பற்ற குட்டிகள் ஒரு வரப்பிரசாதமாக இருந்தன. எளிதான இரை: ஸ்டெகோசொரஸ் போன்ற பலமான டைனோசர்களுடன் சண்டையிட்டு காயமடையும் வேட்டைக்காரர்கள், குணமடையும் வரை பெரிய விலங்குகளை வேட்டையாட முடியாது. உயிர் பிழைத்தல்: அந்த நேரத்தில், காடு முழுவதும் சிதறிக்கிடக்கும் குட்டி டைனோசர்களை இவை மிக எளிதாகப் பிடித்து உண்டு உயிர் பிழைத்தன. ஜூராசிக் காலத்தில் உயிர் என்பது மிக மலிவான ஒன்றாக இருந்தது என்று ஆய்வாளர் டாக்டர் காசியஸ் மோரிசன் குறிப்பிடுகிறார்.

Advertisement

காரணம்

டி-ரெக்ஸ் உருவாகக் காரணம் என்ன?

இந்த ஆய்வு ஒரு முக்கியமான பரிணாமக் கேள்விக்கும் பதிலளிக்கிறது. ஜூராசிக் காலத்திற்குப் பிறகு 70 மில்லியன் ஆண்டுகள் கழித்து வந்த டி-ரெக்ஸ் ஏன் அவ்வளவு வலிமையாக இருந்தது? குறைந்துபோன இரை: பிற்காலத்தில் குட்டி டைனோசர்கள் போன்ற 'எளிதான உணவுகள்' கிடைக்காமல் போனது. வேட்டையாடும் சவால்: ட்ரைசெராடாப்ஸ் போன்ற ஆயுதம் ஏந்திய பலமான விலங்குகளை வேட்டையாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால், டி-ரெக்ஸ் போன்ற டைனோசர்கள் மிக வலிமையான தாடைகளையும், கூர்மையான கண்பார்வையையும் பெற்று உருவெடுத்தன.

Advertisement