NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / 10 கோடி சந்தாதாரர்களைத் தாண்டியது ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி தளம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    10 கோடி சந்தாதாரர்களைத் தாண்டியது ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி தளம்
    10 கோடி சந்தாதாரர்களைத் தாண்டியது ஜியோஹாட்ஸ்டார்

    10 கோடி சந்தாதாரர்களைத் தாண்டியது ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி தளம்

    எழுதியவர் Sekar Chinnappan
    Mar 27, 2025
    08:13 pm

    செய்தி முன்னோட்டம்

    ஜியோஹாட்ஸ்டார் 10 கோடி சந்தாதாரர்களைத் தாண்டி ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது.

    இது இந்தியாவின் ஸ்ட்ரீமிங் துறையில் அதன் வளர்ந்து வரும் செல்வாக்கை பிரதிபலிக்கிறது.

    கடந்த மாதம் தொடங்கப்பட்ட ஜியோசினிமா மற்றும் டிஸ்னி+ஹாட்ஸ்டார் இணைப்பான இந்த தளம், மே 2022 இல் அறிவிக்கப்பட்ட 50.1 மில்லியனில் இருந்து அதன் சந்தாதாரர் தளத்தை இரட்டிப்பாக்கியுள்ளது.

    பல்வேறு உள்ளடக்கம், சிறந்த விலை நிர்ணயம் ஆகியவற்றின் கலவையே இந்த தளத்தின் வெற்றிக்குக் காரணம் என நிறுவனம் தரப்பில் கூறப்படுகிறது.

    இது தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், ஹாலிவுட் படங்கள், பிராந்திய உள்ளடக்கம் மற்றும் அசல் டிஜிட்டல் தயாரிப்புகள் உட்பட பரந்த அளவிலான பொழுதுபோக்கு அம்சங்களைக் கொண்டுள்ளது.

    இந்திய படைப்பாளர்களைக் கொண்ட ஸ்பார்க்ஸ் அறிமுகம் அதன் உள்ளடக்கத்தை மேலும் பன்முகப்படுத்தி உள்ளது.

    ஐபிஎல்

    விளையாட்டு போட்டிகளின் பிரத்யேக உரிமை

    ஜியோஹாட்ஸ்டார் விரிவாக்கத்தில் விளையாட்டு ஸ்ட்ரீமிங் முக்கிய பங்கு வகித்துள்ளது.

    ஐசிசி போட்டிகள், ஐபிஎல் மற்றும் மகளிர் ஐபிஎல் போன்ற முக்கிய நிகழ்வுகளுக்கான பிரத்யேக உரிமைகளை தளம் கொண்டுள்ளது.

    கூடுதலாக, இது பிரீமியர் லீக் மற்றும் விம்பிள்டன் போன்ற உலகளாவிய விளையாட்டுகளையும், புரோ கபடி மற்றும் ஐஎஸ்எல் போன்ற உள்நாட்டு லீக்குகளையும் ஸ்ட்ரீம் செய்கிறது.

    4கே ஸ்ட்ரீமிங், செயற்கை நுண்ணறிவு மற்றும் பல கோணக் காட்சி போன்ற அம்சங்கள் பயனர் அனுபவத்தை மேம்படுத்தியுள்ளன.

    விளையாட்டுகளுக்கு அப்பால், கோல்ட்ப்ளேயின் இசை நிகழ்ச்சி மற்றும் மகாசிவராத்திரி கொண்டாட்டங்கள் போன்ற உலகளாவிய கலாச்சார நிகழ்வுகளை உள்ளடக்கியதாக ஜியோஹாட்ஸ்டார் அதன் நேரடி ஒளிபரப்பு போர்ட்ஃபோலியோவை விரிவுபடுத்தியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஜியோஹாட்ஸ்டார்
    ஓடிடி
    ஜியோ

    சமீபத்திய

    மே 17ஆம் தேதி 11 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: மண்டல வானிலை மையம் கனமழை
    தொடர்ந்து அபத்தமாக உளறும் அமெரிக்கா அதிபர் டிரம்ப்: '0 வரி கட்டணங்கள்' எதுவும் முடிவு செய்யப்படவில்லை என்கிறார் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்
    இந்தியா அமெரிக்காவிற்கு '0-கட்டண' வர்த்தக ஒப்பந்தத்தை வழங்கியுள்ளதாக டிரம்ப் கூறுகிறார் இந்தியா
    இந்தியாவின் தாக்குதலால் பாகிஸ்தானின் கிரானா மலைகளில் கதிர்வீச்சு கசிவா? அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு மறுக்கிறது பாகிஸ்தான்

    ஜியோஹாட்ஸ்டார்

    ஆஸ்கார் விருதுகள் 2025: இந்தியாவில் விழாவை நேரலையில் எப்படிப் பார்ப்பது ஆஸ்கார் விருது
    'முஃபாசா: தி லயன் கிங்' ஜியோஹாட்ஸ்டாரில் விரைவில் வெளியாகிறது ஓடிடி
    ஐபிஎல் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்; ஜியோஹாட்ஸ்டார் புதிய சலுகை அறிவிப்பு ஐபிஎல்
    ஐபிஎல்லிற்காக இலவச ஜியோ ஹாட்ஸ்டார் சந்தாவுடன் புதிய திட்டங்களை அறிமுகம் செய்தது வோடபோன் ஐடியா ஐபிஎல்

    ஓடிடி

    NEEK படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமாகும் தனுஷின் மகன் யாத்ரா தனுஷ்
    அதிர்ச்சி; வெளிநாட்டு ஓடிடி தளத்தில் வெளியான விஜயின் தி கோட் நடிகர் விஜய்
    நண்பா..நண்பி தயாரா? The GOAT அக்டோபர் 3 முதல் OTTயில்! விஜய்
    டிசம்பர் 26 முதல் Netflixஇல் வருகிறது ஸ்க்விட் கேம் 2: வெளியானது டீஸர் நெட்ஃபிலிக்ஸ்

    ஜியோ

    494 நகரங்களுக்கு விரிவாக்கம் செய்யப்பட்ட ஜியோ ஏர்ஃபைபர் சேவை 5G
    இந்த வாரம் திரையரங்குகள் மற்றும் ஓடிடிகளில் வெளியாகும் தமிழ் படங்களின் தொகுப்பு நயன்தாரா
    இலவச டிஸ்னி+ஹாட்ஸ்டார் சந்தா வசதியுடன் கூடிய மொபைல் ரீசார்ஜ் திட்டங்கள் ஏர்டெல்
    புத்தாண்டை முன்னிட்டு ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் சலுகையை அறிவித்தது ஜியோ புத்தாண்டு 2024
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025