494 நகரங்களுக்கு விரிவாக்கம் செய்யப்பட்ட ஜியோ ஏர்ஃபைபர் சேவை
இந்தியாவில் ஏர்டெல் ஏர்ஃபைபர் சேவைக்குப் போட்டியாக கடந்த செப்டம்பர் மாதம் ஜியோ ஏர்ஃபைபர் சேவையை அறிமுகப்படுத்தியது ஜியோ. தொடக்கத்தில் எட்டு நகரங்களில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சேவையை தற்போது 21 மாநிலங்களில் 494-க்கும் மேற்பட்ட நகரங்களில் விரிவுபடுத்தியிருக்கிறது ஜியோ. தமிழகத்திலும் 60-க்கும் மேற்பட்ட நகரங்களில் தங்களது அதிவேக ஏர்ஃபைபர் சேவையை வழங்கி வருகிறது ஜியோ. ஜியோ ஃபைபர் சேவையை மூலம் வை-பை வசதிகளைப் பெற முடியாத ஜியோவின் ஏர்ஃபைபர் சேவை மூலமாக அதிகவேக வை-பை சேவையைப் பெற முடியும். ஏற்கனவே தொலைத்தொடர்புக்காகப் பயன்படுத்தப்பட்டு வரும் கட்டமைப்பைக் கொண்ட இந்தப் புதிய சேவையை வழங்கி வருகிறது ஜியோ. உங்கள் நகரிலும் ஜியோ ஏர்ஃபைபர் சேவை வழங்கப்படுகிறதா என்பதை இங்கே கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
ஜியோ ஏர்ஃபைபருடன் வழங்கப்படும் கூடுதல் நன்மைகள்:
இந்த ஜியோ ஏர்ஃபைபர் சேவையுடன், 550க்கும் மேற்பட்ட டிஜிட்டல் டிவி சேனல்களைப் பார்க்க முடிகிற வகையில் 4K செட்-டாப் பாக்ஸ், டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ஜீ5 மற்றும் சோனிலைவ் உள்ளிட்ட OTT சேவைளுக்கான சந்தா மற்றும் ஸ்மார்ட் ஹோம் சேவைகளை கூடுதல் நன்மைகளாக வழங்குகிறது ஜியோ. இந்த ஏர்ஃபைபருக்கான திட்டங்கள், மாதத்திற்கு ரூ.599 விலையில் இருந்து தொடங்குகின்றன. இந்த 599 ரூபாய்க்கு, 30Mbps வேகத்திலான அதிகவேக அளவற்ற 5G இணைய வசதியை அளிக்கிறது ஜியோ. புதிய ஜியோ ஏர்ஃபைபர் சேவையைப் பெற அருகில் உள்ள ஜியோ ஸ்டோரை அணுகலாம் அல்லது ஜியோவின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமும் பதிவு செய்யலாம்.