
UPI சேவையில் இணையும் ஜப்பான்?
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் கட்டண சேவை அமைப்பான யுபிஐ சேவையுடன் இணைவது குறித்து யோசனை செய்து வருவதாகத் தெரிவித்திருக்கிறார் ஜப்பானின் தொழில்நுட்ப அமைச்சரான கோனோ தாரோ.
பூட்டான், நேபால், சிங்கப்பூர் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் ஏற்கனவே இந்தியாவின் யுபிஐ சேவையை ஏற்றுக்கொண்ட நிலையில், தற்போது ஜப்பானும் அதில் இணைய விருப்பம் தெரிவித்திருக்கிறது.
இது குறித்து கோனோ தாரோவுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார் இந்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்னவ்.
கடந்த மாதம் நடைபெற்ற G7 டிஜிட்டல் அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்றதாகவும், அங்கு மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்னவை சந்தித்ததாகவும் தெரிவித்திருக்கும் கோனோ தாரை, இரு நாடுகளும் டிஜிட்டலாக ஒத்துழைப்பு வழங்க முயற்சி செய்து வருவதாகத் தெரிவித்திருக்கிறார்.
யுபிஐ
இந்தியாவில் யுபிஐ சேவை:
கடந்த மாதம் இந்தியாவின் டிஜிட்டல் கட்டணங்கள் குறித்த வருடாந்திர அறிக்கை வெளியிடப்பட்டது.
அந்த அறிக்கையில் இந்தியாவில் தனி நபர்களுக்கு இடையேயும், தனிநபர்கள் மற்றும் வணிகர்களுக்கிடையேயான பரிவர்த்தனைகளிலும் மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் சேவையாக யுபிஐ சேவையே இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த நிதியாண்டில் மட்டும் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் 84% பரிவர்த்தனைகள் யுபிஐ மூலமே மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இதனைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் 7%-துடன் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் இருக்கின்றன.
பரிவர்த்தனை மதிப்பிலும் 84% யுபிஐ மூலமே டிஜிட்டலாக பணப் பரிமாற்றம் நிகழ்ந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் 14%-துடன் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் இருக்கின்றன.