நிலவில், அசோகர் சின்னத்தையும், இஸ்ரோ சின்னத்தையும் பொறித்த தருணம்: ISRO வெளியிட்ட புதிய வீடியோ
கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி மாலை நிலவின் தென் துருவப்பகுதியில் வெற்றிகரமாக தரையிறங்கியது சந்திரயான்-3. அதனைத்தொடர்ந்து, நேற்று காலை விக்ரம் லேண்டரில் இருந்து பிரஞ்யான் ரோவரை நிலவின் மேற்பரப்பில் தரையிறக்கியது இஸ்ரோ. ப்ரொபல்ஷன் மாடியூலில் பொருத்தப்பட்டுள்ள SHAPE கருவியானது, கடந்த ஆகஸ்ட் 20ம் தேதியே தன்னுடைய பணியைத் துவக்கிவிட்ட நிலையில், லேண்டர் மற்றும் ரோவர், நேற்று தங்களது அறிவியல் பரிசோதனை சார்ந்த பணிகளைத் துவக்கியிருப்பதாக எக்ஸில்(X) பதிவிட்டிருக்கிறது இஸ்ரோ. தரையிறக்கத்தின் போது லேண்டரின் கேமரா எடுத்த புகைப்படங்களுடன், நேற்று காலை நிலவின் மேற்பரப்பில் லேண்டரில் இருந்து ரோவர் தரையிறங்கும் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது இஸ்ரோ. ரோவேரின் சக்கரத்தில் பொறிக்கப்பட்ட அசோகர் சின்னமும், இஸ்ரோ சின்னமும், நிலவின் தரையில் பதித்த அந்த தருணம் வைரலாகிவருகிறது.