NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / சிங்கப்பூரின் செயற்கைக் கோள்களை சுமந்து நாளை விண்ணில் ஏவப்படவிருக்கிறது PSLV 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சிங்கப்பூரின் செயற்கைக் கோள்களை சுமந்து நாளை விண்ணில் ஏவப்படவிருக்கிறது PSLV 
    ஏவலுக்கு ஸ்ரீஹரிக்கோட்டாவில் தயாராகி வரும் PSLV-C56

    சிங்கப்பூரின் செயற்கைக் கோள்களை சுமந்து நாளை விண்ணில் ஏவப்படவிருக்கிறது PSLV 

    எழுதியவர் Prasanna Venkatesh
    Jul 29, 2023
    04:18 pm

    செய்தி முன்னோட்டம்

    சொந்த தேவைகளுக்கான செயற்கை கோள்களை மட்டுமின்றி, வணிக நோக்கத்துடன் பிற நாடுகளின் செயற்கை கோள்களையும் நம்முடைய ராக்கெட்டுகள் மூலம் விண்ணில் செலுத்தும் சேவையை வழங்கி வருகிறது இஸ்ரோ.

    தற்போது சிங்கப்பூரின் ஏழு செயற்கைக் கோள்களை நாளை காலை PSLV ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தத் திட்டமிட்டிருக்கிறது இஸ்ரோ. இந்த ராக்கெட் ஏவலுக்கான 25 மணி நேர கவுண்ட்டவுன் இன்று காலை ஐந்து மணிக்குத் தொடங்கியது.

    சிங்கப்பூரின் முதன்மையான DS-SAR செயற்கைக் கோளுடன், ஆறு கூடுதல் செயற்கைக் கோள்களும் இந்திய நேரப்படி நாளை காலை 6.30 மணிக்கு ஆந்திர பிரதேசத்தில் உள்ள ஸ்ரீஹரிக்கோட்டை ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்படவிருக்கின்றன.

    இஸ்ரோ

    ஏவல் திட்டம் என்ன? 

    சிங்கப்பூரின் செயற்கைக் கோள்களை நாளை விண்ணுக்கு எடுத்துச் செல்லவிருக்கும் இந்தியாவின் PSLC-C56 ராக்கெட்டுக்கு, இது 58வது ஏவலாகும். இந்த PSLC-C56 ராக்கெட்டானது 44.4மீ உயரத்துடன், நான்கு நிலைகளைக் கொண்டிருக்கிறது.

    கூடுதல் பூஸ்டர்கள் எதுவுமின்றி, முதன்மையான ராக்கெட்டை மட்டுமே கொண்டு இந்த ஏவல் திட்டமிடப்பட்டிருக்கிறது. இது போல கூடுதல் பூஸ்டர்களின்றி ஏவப்படுவது இது 17வது முறையாகும்.

    காலை 6.30 மணியில் ஏவப்படுவதில் இருந்து 25 நிமிடங்களில் மொத்த செயல்பாடுகளும் திட்டமிடப்பட்டிருக்கின்றன.

    பூமியில் இருந்து 535 கிமீ உயர சுற்றுவட்டப் பாதையில் இந்த செயற்கைக் கோள்கள் நிலைநிறுத்தத் திட்டமிடப்பட்டிருக்கின்றன. விண்ணில் ஏவப்பட்டு 21வது நிமிடத்தில் 4வது நிலை பிரிந்த பின்பு, 4 நிமிட இடைவெளியில் 7 செயற்கைக் கோள்களும் சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்படவிருக்கின்றன.

    ட்விட்டர் அஞ்சல்

    இஸ்ரோவின் ட்விட்டர் பதிவு:

    🇮🇳PSLV-C56🚀/🇸🇬DS-SAR satellite 🛰️ Mission:
    The launch is scheduled for
    📅 July 30, 2023
    ⏲️ 06:30 Hrs. IST
    🚩First launch pad SDSC-SHAR, Sriharikota. @NSIL_India has procured PSLV-C56 to deploy the DS-SAR satellite from DSTA & ST Engineering, Singapore

    and 6 co-passenger… pic.twitter.com/q42eR9txT7

    — ISRO (@isro) July 24, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இஸ்ரோ
    சிங்கப்பூர்
    வணிகம்
    விண்வெளி

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    இஸ்ரோ

    விண்ணில் செலுத்தப்படும் இஸ்ரோவின் புதிய SSLV D2 ராக்கெட் - முக்கிய விவரங்கள் இந்தியா
    இந்தியாவின் முதல் ஹைபிரிட் ராக்கெட் தமிழ்நாட்டில் இருந்து ஏவப்பட்டது இந்தியா
    இந்தியர்களே விண்வெளிக்கு பறக்க ஆசையா? 2030 ஆண்டிற்குள் விண்வெளி சுற்றுலா திட்டம் விண்வெளி
    இஸ்ரோவின் இளம் விஞ்ஞானி திட்டம் - விண்ணப்பிக்கும் முறை விண்வெளி

    சிங்கப்பூர்

    இந்தியாவின் யூபிஐ சிங்கப்பூரின் PayNow இணைப்பு! தொடங்கி வைத்த பிரதமர்கள் தொழில்நுட்பம்
    இன வெறுப்பு: இந்திய-இஸ்லாமியர்களை விரட்டிவிட்ட சிங்கப்பூர் சூப்பர் மார்க்கெட்  இந்தியா
    1 கிலோ கஞ்சா கடத்த முயற்சித்தவரை தூக்கிலிட்டது சிங்கப்பூர்   உலகம்
    முதலீடுகளை ஈர்க்க வெளிநாடுகளுக்கு செல்லும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  மு.க ஸ்டாலின்

    வணிகம்

    புதிய முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கும் கோ ஏர்லைன்ஸ் நிறுவனம் விமான சேவைகள்
    வேதாந்தாவுடன் கூட்டு முயற்சியில் இருந்து விலகும் ஃபாக்ஸ்கானின் முடிவு; இந்தியாவிற்கு பின்னடைவு இல்லை இந்தியா
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூலை 11 தங்கம் வெள்ளி விலை
    புதிய சுற்றுப் பணிநீக்கத்தில், 276 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்த மைக்ரோஃசாப்ட்  மைக்ரோசாஃப்ட்

    விண்வெளி

    புறக்கோளில் நீராவி இருப்பைக் கண்டறிந்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி! நாசா
    அழிந்து கொண்டிருக்கும் சனி கோளின் வளையம்.. ஆராய்ச்சியில் இறங்கிய நாசா! நாசா
    சந்திரன் மற்றும் சூரியனுக்கு விண்கலங்களைச் செலுத்தும் இஸ்ரோ.. என்னென்ன திட்டங்கள்? இஸ்ரோ
    சனி கோளைச் சுற்றி வரும் 62 புதிய நிலவுகளை கண்டறிந்துள்ளனர் விஞ்ஞானிகள்! தொழில்நுட்பம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025