Page Loader
ககன்யான் விண்கலனில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோவை வெளியிட்டது இஸ்ரோ
இந்த சோதனையின் போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

ககன்யான் விண்கலனில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோவை வெளியிட்டது இஸ்ரோ

எழுதியவர் Sindhuja SM
Oct 22, 2023
05:20 pm

செய்தி முன்னோட்டம்

விண்ணுக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியாவின் முதல் திட்டமான 'ககன்யான்' திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக உழைத்து வருகின்றனர். வரும் 2025 ஆம் ஆண்டு இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ககன்யான் விண்கலத்தின் முதல் சோதனை ஓட்டத்தை நேற்று காலை இஸ்ரோ வெற்றிகரமாக நடத்தி காட்டியது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து நேற்று காலை 10 மணிக்கு ககன்யான் சோதனை கலன் விண்ணில் ஏவப்பட்டது. இந்த ஏவுதலின் போது, ககன்யான் விண்கலத்தில் பொருத்தப்பட்டிருந்த மனிதர்களை பத்திரமாக தரையிறக்கும் 'கிரேவ் எஸ்கேப் சிஸ்டம்' நடைமுறை சோதனை செய்யப்பட்டது. இந்நிலையில், தற்போது இந்த சோதனையின் போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

ககன்யான் விண்கலனில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ