NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / iOS 17.4 புதுப்பித்தலுக்குப் பிறகு அடிவாங்கும் ஐபோன் பேட்டரி சார்ஜ்; பயனர்கள் புகார்
    அடுத்த செய்திக் கட்டுரை
    iOS 17.4 புதுப்பித்தலுக்குப் பிறகு அடிவாங்கும் ஐபோன் பேட்டரி சார்ஜ்; பயனர்கள் புகார்
    ஒரு பயனர் தனது பேட்டரி இரண்டு மணி நேரத்தில் 40% இழந்ததாகக் கூறினார்

    iOS 17.4 புதுப்பித்தலுக்குப் பிறகு அடிவாங்கும் ஐபோன் பேட்டரி சார்ஜ்; பயனர்கள் புகார்

    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 11, 2024
    02:33 pm

    செய்தி முன்னோட்டம்

    ஆப்பிளின் சமீபத்திய iOS 17.4 புதுப்பிப்பு, ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள மூன்றாம் தரப்பு ஆப் ஸ்டோர்களில் இருந்து சைட்லோடிங் ஆப்ஸ் மற்றும் திருட்டிற்கு எதிரான மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு போன்ற புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியது.

    இருப்பினும், சில ஐபோன் பயனர்கள், இந்த புதிய ஃபார்ம்வேரை நிறுவிய பிறகு, குறிப்பிடத்தக்க வகையில் பேட்டரி சார்ஜ் குறைவதாக புகாரளித்துள்ளனர்.

    ஒரு பயனர் தனது பேட்டரி இரண்டு மணி நேரத்தில் 40% இழந்ததாகக் கூறினார்.

    மற்றொருவர் தொலைபேசியைப் பயன்படுத்தாமல் ஒரே இரவில் 60% முதல் 0% வரை குறைந்துள்ளது எனக்குறிப்பிட்டார்.

    பேட்டரி சார்ஜ் நிற்கும் நேரம் குறைபாடு தவிர, சில பயனர்கள் iOS 17.4 க்கு புதுப்பித்த பிறகு சார்ஜிங் சிக்கல்களையும் சந்தித்துள்ளனர்.

    தீர்வுகள்

    பேட்டரி குறைபாடுகளை நீக்க சில தீர்வுகள்

    பேட்டரி ட்ரைன் ஆவதை தடுக்க, பயனர்கள் தங்கள் ஐபோனை ரீசெட் செய்து முயற்சி செய்யலாம்.

    ஆப் ஸ்டோர் மூலம் அனைத்து பயன்பாடுகளையும் புதுப்பித்தல் மற்றும் செட்டிங்ஸ்-> பேட்டரியைச் சரிபார்த்து, பேட்டரி சார்ஜை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தும் ஆப்களை அடையாளம் காண முடியும்.

    தேவையற்ற ஆப்களை நீக்கலாம். திரையின் பிரைட்னஸ் குறைப்பது அல்லது செட்டிங்ஸ்-> டிஸ்பிலே & பிரைட்னஸ் பகுதிக்கு சென்று, ஆல்வேஸ் ஆன் என்ற ஆப்ஷனை நீக்கினால், பேட்டரி ஆயுளைப் பாதுகாக்க உதவும்.

    இந்த தீர்வுகளை முயற்சித்த பிறகும், பேட்டரி ட்ரைன் ஆவது நீடித்தால், பின்னணி செயல்பாட்டைக் கட்டுப்படுத்தவும், பேட்டரி ஆயுளை மேம்படுத்தவும், பயனர்கள் செட்டிங்ஸ்-> பேட்டரியில் குறைந்த பவர் பயன்முறையை இயக்கலாம்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஐபோன்
    ஆப்பிள்
    ஆப்பிள் தயாரிப்புகள்
    ஆப்பிள் நிறுவனம்

    சமீபத்திய

    போர்ப்பதற்றம் காரணமாக ஐபிஎல் 2025 தொடர் நிறுத்தம்; பிசிசிஐ அறிவிப்பு ஐபிஎல் 2025
    பாகிஸ்தான் விமானப்படையின் AWAC-ஐ நேற்றிரவு இந்தியா சுட்டு வீழ்த்தியது: அதன் சிறப்புகள் என்ன? இந்தியா
    பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியிலும் கெத்தாக நிற்கும் இந்திய பங்குச் சந்தைகள்; காரணம் என்ன? பங்குச் சந்தை
    இந்தியா-பாகிஸ்தான் பதட்டங்கள் காரணமாக CA தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன தேர்வு

    ஐபோன்

    செப் 12 ஆப்பிளின் வொண்டர்லஸ்ட் நிகழ்வு, என்னென்ன அறிமுகங்கள்? ஆப்பிள்
    என்னென்னப புதிய சாதனங்களை இன்றைய வொண்டர்லஸ்ட் நிகழ்வில் வெளியிடுகிறது ஆப்பிள்? ஆப்பிள்
    வெளியானது ஆப்பிளின் புதிய ஃப்ளாக்ஷிப் 'ஐபோன் 15 சீரிஸ்'  ஆப்பிள்
    செப். 18ல் வெளியாகும் ஆப்பிள் சாதன இயங்குதளங்கள் மற்றும் ஆப்பிளின் பிற அப்டேட்கள் ஆப்பிள்

    ஆப்பிள்

    ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸை நினைவு கூர்ந்த டிம் குக் ஸ்மார்ட்போன்
    ஒருபோதும் கைகடிகாரங்களை அணியாத ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ், ஏன்? ஸ்டீவ் ஜாப்ஸ்
    பிரான்ஸில் ஐபோனின் 12ன் கதிர்வீச்சு வெளியீட்டு அளவீடு பிரச்சினையை சமாளிக்க புதிய மென்பொருள் அப்டேட்டை வெளியிடும் ஆப்பிள் ஐபோன்
    ஐபோன் 15 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் மேலும் ஒரு புதிய பிரச்சினை.. வாடிக்கையாளர்கள் அதிருப்தி ஐபோன்

    ஆப்பிள் தயாரிப்புகள்

    ஆப்பிளின் WWDC 2023 நிகழ்வு.. எப்போது? என்ன எதிர்பார்க்கலாம்? ஆப்பிள்
    ஆப்பிள் WWDC 2023: இந்த நிகழ்வில் வெளியான மின்சாதன அறிவிப்புகள் என்னென்ன? ஆப்பிள்
    ஆப்பிள் WWDC 2023: ஆப்பிள் சாதனங்களின் இயங்குதளங்களுக்கான அப்டேட்கள்? ஆப்பிள்
    ஆப்பிள் WWDC 2023: அறிமுகமானது புதிய "விஷன் ப்ரோ" AR ஹெட்செட்! ஆப்பிள்

    ஆப்பிள் நிறுவனம்

    சத்தமே இல்லாமல் பணிநீக்கம் செய்த ஆப்பிள்! ஊழியர்கள் கதறல் தொழில்நுட்பம்
    கலர் கலராக மாறும் வாட்ச் பேண்ட் - அறிமுகம் செய்த ஆப்பிள் ஆப்பிள் தயாரிப்புகள்
    திடீரென ஐபோன் IOS-16 Live Wallpaper-ஐ நீக்கிய ஆப்பிள் - காரணம் என்ன? ஐபோன்
    OpenAI உடன் இணையும் முன்னாள் ஆப்பிள் குழு - நோக்கம் என்ன? ஆப்பிள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025