அதிரடியாக சரிந்த ஐபோன் 14 விலை - ரூ. 34999 வாங்க முடியும்! எப்படி?
செய்தி முன்னோட்டம்
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மாடல்கள் ஆன்லைன் விற்பனை தளமான ப்ளிப்கார்டில் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.
அதன்படி ஐபோன் 11 மற்றும் ஐபோன் 13 விலை குறைக்கப்பட்டு, அதனைத் தொடர்ந்து ஐபோன் 14 தற்போது வெறும் 35 ஆயிரத்தில் வாங்க முடியும் எனக்கூறப்படுகிறது.
Flipkart இன் சமீபத்திய Big Bachat Dhamal ஆஃபரில், ரூ. 79900 விற்பனையாகி வரும் ஐபோனின் விலை, தள்ளுபடியில் 68,999 ரூபாய்க்கு வழங்குகிறது.
இதுமட்டுமின்றி, HDFC வங்கி கிரெடிட் கார்டை பயன்படுத்தினால், ரூ.4,000 தள்ளுபடி கூடுதல் தள்ளுபடி பெறலாம்.
தொடர்ந்து பழைய எக்ஸ்சேஞ்ச் போனுக்கு 30,000 வரை தள்ளுபடி செய்கிறது. இப்படி செய்வதன் மூலம் ரூ. 34999-க்கு வாங்க முடியும். இதுமட்டுமின்றி இன்னும் சில சலுகைகளை ப்ளிப்கார்ட் வழங்குகிறது.
ஐபோன் விலை
ஐபோன் 14-க்கு ப்ளிப்கார்டில் செம்ம தள்ளுபடியை அறிவித்துள்ளது
அதனை சரியாக பயன்படுத்தினால் மிகக் குறைந்த விலைக்கே ஐபோன் 14 மற்றும் 13 போன்ற மாடல்களை வாங்கி விட முடியும்.
ஐபோன் 14, 128ஜிபி மாடலை வாங்க நினைப்பவர்கள் இது மிகப்பெரிய மிகப்பெரிய வரப்பிரசாதம் தான்.
ஐபோன் 14 அம்சங்கள்
ஐபோன் 14 6.06-இன்ச் டிஸ்பிளே மற்றும் ஆப்பிள் ஏ15 பயோனிக் சிப்செட் உள்ளது.
இதில், 12mp செல்பீ கேமரா, 12எம்பி + 12mp டூயல் ரியர் கேமரா செட்டப், 128 ஜிபி / 256 ஜிபி / 512 ஜிபி என்கிற 3 ஸ்டோரேஜ் ஆப்ஷன்ஸ் கொண்டுள்ளது.