இந்திய ஏற்றுமதியில் வளர்ச்சி - 25% கைப்பற்றிய ஆப்பிள் நிறுவனம்
கடந்த 2022 ஆம் ஆண்டில் ஸ்மார்ட் போன் ஏற்றுமதியில் ஆப்பிள் நிறுவனம் 25 சதவீதத்தை எட்டியுள்ளதாக Counterpoint Research தெரிவித்துள்ளது. அதன்படி, ஆப்பிள் நிறுவனத்திடமிருந்து இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஏற்றுமதி 65 சதவிகிதம் முதல் 162 சதவிகிதம் வரை வளர்ந்துள்ளன. 2021 ஆம் ஆண்டில் 12% ஆக இருந்த மதிப்பு தான் 2022 இல் 25% ஆக மாறியது. எனவே, மேட் இன் இந்தியா ஸ்மார்ட்போன் ஏற்றுமதியில் ஆண்டுக்கு 34% வளர்ச்சியை எட்டியுள்ளது. ஒட்டுமொத்த ஏற்றுமதியின் அடிப்படையில், ஆண்டுக்கு 37% அளவு வளர்ச்சியை எட்டி இருக்கிறது. மேட் இன் இந்தியா ஸ்மார்ட்போன் ஏற்றுமதி 2022 ஆம் ஆண்டில் 3% குறைந்து 188 மில்லியன் யூனிட்களை எட்டியுள்ளது என்று அறிக்கை கூறுகிறது.