ஆப்பிள் 'Pay Later' சேவையை அறிமுகம் - பயன்படுத்துவது எப்படி?
ஆப்பிள் நிறுவனமானது தற்போது 'Apple Pay Later' என்ற சேவையை அமெரிக்காவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இச்சேவையானது வாங்கும் போது 4 பேமண்ட்களாக பிரிக்கப்படும். ஆறு மாதங்களுக்கு வட்டி இல்லாமலும், கட்டணமும் வசூலிப்பதில்லை. இவை iPhone இன் Wallet பயன்பாட்டில் உள்ளது. எனவே ஆப்பிள் நிறுவனத்திடமிருந்து, $50 முதல் $1,000 வரை கடன் பெற முடியும். தொடர்ந்து வரும் மாதங்களில் தகுதியுள்ள அனைத்து பயனர்களுக்கும், கடன் வழங்க திட்டமிட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனம் இந்த கடனை Apple Financing LLC மூலம் கடனை வழங்குகிறது. மேலும், இச்சேவையை, iOS 16.4 இயங்கும் உங்கள் iPhone மற்றும் iPad இல் ஆன்லைன் மற்றும் ஆப்ஸ் சார்ந்த வாங்குதல்களுக்கு மட்டுமே Apple Pay லேட்டரைப் பயன்படுத்த முடியும் என கூறப்படுகிறது.