ட்விட்டரைப் போலவே புதிய சமூக வலைத்தளம்.. உருவாக்கி வரும் இன்ஸ்டாகிராம்!
முன்னர் ஜாக் டார்ஸேயின் தலைமையின் கீழ் நம்பிக்கையின் அடையாளமாக, தகவல் பாதுகாப்புடன் விளங்கி வந்தது ட்விட்டர். ஆனால், எலான் மஸ்க் ட்விட்டரை கைப்பற்றிய பிறகு செய்யப்பட்ட மாற்றங்கள், ட்விட்டர் பயனர்களை அதே போன்ற பிற சேவைகளை எதிர்நோக்க வைத்திருக்கிறது. இந்த சின்ன இடைவெளியைப் பயன்படுத்த பல நிறுவனங்கள் களமிறங்கியிருக்கின்றன. ட்விட்டரின் முன்னாள் சிஇஓ ஜாக் டார்ஸே கூட ப்ளூஸ்கை என்ற ட்விட்டப் போன்ற ஒரு சேவையை உருவாக்கி வருவதாகத் தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில், மெட்டாவை தாய் நிறுவனமாகக் கொண்ட இன்ஸ்டாகிராமும் ட்விட்டருக்கு போட்டியாக புதிய சமூக வலைத்தளம் ஒன்றைத் அறிமுகப்படுத்தவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த புதிய சமூக வலைத்தளத்தினை அந்நிறுவனம் வரும் ஜூன் மாதம் அறிமுகப்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இன்ஸ்டாவின் புதிய சமூக வலைத்தளம்:
புகைப்படங்களை மையமாக வைத்து இயங்கு இன்ஸ்டாகிராமை அடித்தளமாகக் கொண்ட எழுத்தை அடிப்படையாகக் கொண்ட ட்விட்டரை போலவேயான சமூக வலைத்தளம் ஒன்று கட்டமைக்கப்பட்டுள்ளது. ட்விட்டரில் இந்தப் புதிய சேவை குறித்த தகவல்கள் தற்போது கசிந்திருக்கிறது. ட்விட்டரின் நகலாக இன்ஸ்டாகிராம் வடிவில் இருக்கிறது இந்த புதிய வலைத்தளம். ட்விட்டரில் இருக்கும் அனைத்து வசதிகளையும் இந்த புதிய சமூக வலைத்தளத்திலும் இன்ஸ்டாகிராம் முயற்சி செய்து வருவதாகக் கூறப்படுகிறது. முக்கியமாக பயனர்களின் பாதுகாப்பை முதன்மையாகக் கொண்டு இந்தப் புதிய சமூக வலைத்தளம் உருவாக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் புதிய சமூக வலைத்தளம் குறித்த மேலான தகவல்களை இனி வரும் நாட்களில் அந்நிறுவனம் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.