இன்போசிஸ் நிறுவனர், நாராயண மூர்த்தி தினமும் காலை 6:20 மணிக்கு அலுவலகத்திற்கு வருவார்; காரணம் தெரியுமா?
இன்போசிஸ் நிறுவனத்தின், நிறுவனரும், அதன் முன்னாள் தலைவருமான, நாராயண மூர்த்தி சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்து இருந்தார். அதில் அவரது நேர மேலாண்மை, நேரம் தவறாமை மற்றும் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருப்பது மிகவும் முக்கியம் என்னதை உறுதியாக நம்புவதாகவும் கூறியிருந்தார். 'மனி கன்ட்ரோல்' எனும் தனியார் ஊடகத்திற்கு அவர் தந்த பேட்டியில் ஒரு ஆச்சர்யமான தகவலையும் பகிர்ந்துள்ளார். நேர்காணலில், மூர்த்தி, இன்போசிஸ்-ஐ உருவாக்க செலவழித்த நேரத்தையும், அது அவரது இரண்டு குழந்தைகளுடன் போதுமான நேரத்தை செலவிடுவதை எவ்வாறு குறைத்தது என்று கேட்கப்பட்டது. பல ஆண்டுகளாக, தனது அலுவலகத்திற்கு காலை 6:20 மணிக்கு வந்து, இரவு 8 அல்லது 9 மணி வரை வேலை செய்வதாக தெரிவித்தார்.
இன்போசிஸ் தலைவர் நாராயண மூர்த்தியின் அன்றாட பழக்கம்
மேலும், அவர் இந்த பழக்கத்தை, 2011 இல் ஓய்வு பெறும் வரை கடைப்பிடித்ததாகவும் தெரிவித்தார். இந்த ஒழுக்கத்தை அவர் கடைபிடிப்பதன் மூலம், இளைஞர் சமூதாயத்திற்கு, சரியான நேரத்தில் அலுவலகத்திற்குச் செல்வது பற்றிய ஒரு முக்கிய செய்தியை அனுப்பியதாகவும் அவர் தெரிவித்தார். "தொழில் முனைவோர் என்பவர்கள் துணிச்சலானவர்கள் என்று நான் நினைக்கிறேன். இது தைரியத்தைப் பற்றியது, தியாகம் பற்றியது," என்றார். தான், இன்போசிஸ் நிறுவனத்தை உருவாக்கிய போதும், தனது குழந்தைகளுக்கான நேரத்தை ஒதுக்க முடியாமல், தியாகம் செய்ய நேரிட்டதாகவும், அவர் தெரிவித்தார். மூர்த்தி, தனது துணைவியார் சுதாவை பற்றி "குழந்தைகள் இருவரின் வளர்ச்சிக்கு காரணம் சுதா தான். அவர்களின் அனைத்து சாதனைகளுக்கும் அவர் மட்டுமே காரணம்" என்று பாராட்டினார்.