NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / இந்தியாவில் வெளியானது இன்ஃபினிக்ஸ் நோட் 30 5G ஸ்மார்ட்போன்
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவில் வெளியானது இன்ஃபினிக்ஸ் நோட் 30 5G ஸ்மார்ட்போன்
    இன்ஃபினிக்ஸின் புதிய நோட் 30 5G ஸ்மார்ட்போன்

    இந்தியாவில் வெளியானது இன்ஃபினிக்ஸ் நோட் 30 5G ஸ்மார்ட்போன்

    எழுதியவர் Prasanna Venkatesh
    Jun 14, 2023
    04:32 pm

    செய்தி முன்னோட்டம்

    தங்களுடைய புதிய நோட் 30 5G பட்ஜெட் ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது இன்ஃபினிக்ஸ் நிறுவனம்.

    120Hz ரெப்ரஷ் ரேட் மற்றும் 580 நிட்ஸ் அதிகபட்ச பிரைட்னஸ் கொண்ட 6.78 இன்ச் LCD டிஸ்பிளேவை புதிய நோட் 30-யில் பயன்படுத்தியிருக்கிறது இன்ஃபினிக்ஸ்.

    பின்பக்கம் 108MP முதன்மை கேமராவுடன், இரண்டு சென்சார்களும் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த சென்சார்கள் குறித்த தகவல்களை அந்நிறுவனம் குறிப்பிடவில்லை. முன்பக்கம் 16MP செல்ஃபி கேமரா கொடுக்கப்பட்டிருக்கிறது.

    டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களைக் கொண்டிருக்கும் இந்த நோட் 30-ல் பைபாஸ் சார்ஜிங் சிஸ்டம் என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தியிருக்கிறது இன்ஃபினிக்ஸ். இதன் மூலம், பேட்டரியின் ஆயுளை அதிகரிக்க நேரடியாக மதர்போர்டுக்கு சார்ஜை விநியோகம் செய்யுமாம்.

    இன்ஃபினிக்ஸ்

    இன்ஃபினிக்ஸ் நோட் 30 5G: ப்ராசஸர் மற்றும் பிற வசதிகள்: 

    இந்த புதிய நோட் 30-ல் மீடியாடெக் டைமன்சிட்டி 6080 ப்ராசஸரைப் பயன்படுத்தியிருக்கிறது இன்ஃபினிக்ஸ். இத்துடன் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் கூடிய 5,000mAh பேட்டரியை வழங்கியிருக்கிறது.

    கனெக்டிவிட்டிக்காக 5G, வை-பை, ப்ளூடூத், ஜிபிஎஸ், என்எஃப்சி, 3.5மிமீ ஆடியோ ஜாக் மற்றும் டைப்-சி போர்ட் ஆகியவை வழங்கப்பட்டிருக்கிறது.

    இந்த நோட் 30 5G-யின் 4GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் கொண்ட வேரியன்டை ரூ.14,999 விலையிலும், 8GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் கொண்ட வேரியன்டை ரூ.15,999 விலையிலும் வெளியிட்டிருக்கிறது இன்ஃபினிக்ஸ்.

    ஆக்சிஸ் வங்கியின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு மூலம் பரிவர்த்தனை செய்தால் ரூ.1,000 தள்ளுபடி விலையில் இந்த இன்ஃபினிக்ஸை பெற்றுக் கொள்ள முடியும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஸ்மார்ட்போன்
    புதிய மொபைல் போன்

    சமீபத்திய

    EPFO 3.0: ஜூன் 2025இல் அமலுக்கு வரும் புதிய திட்டம்; விரைவில் கிளைம் பணத்தை ஏடிஎம்மிலேயே பெறலாம் வருங்கால வைப்பு நிதி
    பங்களாதேஷில் ஷேக் ஹசீனா மீது மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் பதிவு பங்களாதேஷ்
    வடகிழக்கு இந்தியாவில் பெய்துவரும் கனமழையால் 25 பேர் பலி; மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரம் கனமழை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை

    ஸ்மார்ட்போன்

    அனைத்து மொபைல்களிலும் FM ரேடியோ வசதி.. மத்திய அரசு புதிய உத்தரவு! மத்திய அரசு
    பிக்ஸல் 7a வெளியீடு.. சலுகை விலையில் 'கூகுள் பிக்ஸல் 6a'! கூகுள்
    ஜீன்ஸ் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் வெடித்து சிதறியது - உயிர் தப்பித்த இளைஞர்!  கேரளா
    கூகுள் I/O நிகழ்வு.. என்னென்ன அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறது கூகுள்? கூகுள்

    புதிய மொபைல் போன்

    வெளியானது டெக்னோ நிறுவனத்தின் புதிய ஃபோல்டபிள் போன்!  ஆண்ட்ராய்டு
    வெளியானது ரியல்மீ-ன் புதிய நார்சோ பட்ஜெட் மொபைல்!  ஸ்மார்ட்போன்
    எப்படி இருக்கிறது 'சாம்சங் கேலக்ஸி S23': ரிவ்யூ  ஸ்மார்ட்போன்
    வெளியானது 'சாம்சங் கேலக்ஸி M14 5G' ஸ்மார்ட் போன்!  சாம்சங்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025