Page Loader
ப்ளூ ஆரிஜின் விமானத்தில் விண்வெளிக்கு சுற்றுலாப் பயணியாக பயணிக்கும் முதல் இந்திய விமானி
ஆறு பயணிகளை ஏற்றிக்கொண்டு ஞாயிற்றுக்கிழமை விண்வெளிக்கு புறப்பட்டது, ப்ளூ ஆரிஜின்

ப்ளூ ஆரிஜின் விமானத்தில் விண்வெளிக்கு சுற்றுலாப் பயணியாக பயணிக்கும் முதல் இந்திய விமானி

எழுதியவர் Venkatalakshmi V
May 20, 2024
07:30 am

செய்தி முன்னோட்டம்

ஜெஃப் பெஸோஸ் நிறுவிய ப்ளூ ஆரிஜின் விமானம், மூத்த இந்திய விமானி கேப்டன் கோபிசந்த் தோட்டகுரா உட்பட ஆறு பயணிகளை ஏற்றிக்கொண்டு ஞாயிற்றுக்கிழமை விண்வெளிக்கு புறப்பட்டது. நியூ ஷெப்பர்ட் ராக்கெட் மற்றும் காப்ஸ்யூல், மேற்கு டெக்சாஸில் உள்ள புளூ ஆரிஜினின் ஏவுதளத்தில் இருந்து காலை 9:36 மணிக்கு(உள்ளூர் நேரம்) புறப்பட்டதாக சிஎன்என் தெரிவித்துள்ளது. சிஎன்என் அறிக்கையின்படி, விண்வெளியை நோக்கி புறப்பட்ட காப்ஸ்யூலில் -ஆந்திரப் பிரதேசத்தின் விஜயவாடாவைச் சேர்ந்த கேப்டன் கோபிசந்த் தோட்டகுரா, முதலீட்டாளர் மேசன் ஏஞ்சல், பிரெஞ்ச் கிராஃப்ட் ப்ரூவரி நிறுவனர் சில்வைன் சிரோன், மென்பொருள் பொறியாளரும் தொழிலதிபருமான கென்னத் எல்.ஹெஸ், ஓய்வுபெற்ற கணக்காளர் கரோல் ஷாலர் மற்றும் ஓய்வுபெற்ற அமெரிக்க விமானப்படை கேப்டன் எட் ஷாலர் ஆகியோர் பயணப்பட்டனர்.

embed

கேப்டன் கோபிசந்த் தோட்டகுரா

#BlueOrigin space tourism: #GopichandThotakura, Indian-origin entrepreneur and pilot, is among the six crew members on the Blue Origin New Shepard -25 missionhttps://t.co/06dm626YyE— Hindustan Times (@htTweets) May 19, 2024

embed

வெற்றிகரமாக தரையிறங்கிய ப்ளூ ஆரிஜின்

🎯 Touchdown of the capsule with the 6 crew members, in a few minutes we will see the rescue teams approaching the area ✔️ All crew members are OK#NS25 #Blueorigin pic.twitter.com/dazgzPJOAB— LEOSpace (@LEOrbitSpace) May 19, 2024