Page Loader
YouTubeன் புதிய CEO-ஆக பொறுப்பேற்ற நீல்மோகன்! யார் இவர்?
யூடியூப் சிஇஓ-வாக பதவியேற்ற நீல் மோகன்

YouTubeன் புதிய CEO-ஆக பொறுப்பேற்ற நீல்மோகன்! யார் இவர்?

எழுதியவர் Siranjeevi
Feb 17, 2023
04:43 pm

செய்தி முன்னோட்டம்

ஆல்ஃபபெட் நிறுவனத்திற்கு சொந்தமான யூடியூப் தளத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக அமெரிக்க வாழ் இந்தியரான நீல் மோகன் நியமிக்கப்பட்டுள்ளார். கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக சுந்தர் பிச்சை, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓவாக சத்யா நாதெள்ளா ஆகியோர் உள்ள நிலையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த நீல் மோகன் யூடியூப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பதவிக்கு தேர்வாகி உள்ளார். மேலும், யூடியூப்-இன் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகுவதாக சூசன் வோஜ்சிகி அறிவித்தைத் தொடர்ந்து, நீல் மோகன் அந்த இடத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார். 49 வயதாகும் நீல் மோகன் நீல் மோகன் கடந்த 2008இல் கூகுளில் சேர்ந்தார். தொடக்கத்தில் இருந்தே கூகுள் நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி வந்த இவர் பெரிதும் கவனிக்கப்பட்டார்.

யூடியூப் நிறுவனம்

யூடியூப் தளத்தில் புதிய தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்ற நீல் மோகன்! யார் இவர் தெரியுமா?

அதனைத்தொடர்ந்து, 2012 சமயத்தில் இவர் யூ டியூப் பிரிவிற்கு மாற்றப்பட்டார். இதையடுத்து 2015இல் யூடியூப்பின் தலைமை தயாரிப்பு அதிகாரியானார். யார் இந்த நீல் மோகன் 1976ம் ஆண்டு இந்தியாவில் உள்ள லக்னோவில் இந்திய குடும்பத்தில் பிறந்தவர். அமெரிக்காவில் உள்ள ஸ்டான்ட்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் தனது மின் பொறியியல் இளங்கலைப் பட்டம் பெற்றவர்.முதலில் Accenture நிறுவனத்தில் பணிபுரிந்தார். பின் 1997ம் ஆண்டு ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனமான NetGravity என்ற நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார். தொடர்ந்து DoubleClick என்ற நிறுவனத்தில் நீண்ட காலமாக பணியாற்றிய இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. பின் 2008இல் கூகுளில் சேர்ந்து, 2015ம் வரைஅந்நிறுவனத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருக்கிறார் நீல். இதன் காரணமாகவே தற்போது அதே Youtube நிறுவனத்தின் CEO-வாகவும் பதவி உயர்த்தப் பட்டுள்ளார்.