
மிக குறுகிய பகல் நேரத்தைக் கொண்ட டிசம்பர் 22ம் நாள், ஏன் தெரியுமா?
செய்தி முன்னோட்டம்
பூமியில் இன்றைய நாளானது (டிசம்பர் 22), இந்த ஆண்டின் மிகவும் குறுகிய நாளாகப் பார்க்கப்படுகிறது. இந்நாளை குளிர்கால சங்கிராந்தி (Winter Solstice) என அழைக்கின்றனர்.
நமது பூமியின் அச்சானது 90 டிகிரி என நேர் கோணத்தில் இல்லாமல், 23.4 டிகிரி வரை சாய்வாகவே இருக்கிறது.
அப்படி இருக்கும் போது, ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தின் போது, பூமியின் வட அரைக்கோளப் பகுதியானது தென் அரைக்கோளத்தை விட சூரியனில் இருந்து சற்று தள்ளி இருக்கும்.
இதன் காரணமாக டிசம்பர் மாதம் குறிப்பிட்ட ஒரு நாள் மட்டும், குறைவான சூரிய வெளிச்ச நேரத்தையும், நீண்ட இரவையும் கொண்டிருக்கும். இந்த நாளையே குளிர்கால சங்கிராந்தி என அழைக்கின்றனர்.
சூரியன்
குறைவான சூரிய வெளிச்சம் கொண்ட நாள்:
இந்த நாளில் பூமியின் வட அரைக்கோளத்தில் உள்ள ஒரு சில பகுதிகளில் சூரிய உதயம் மிகவும் தாமதமாகத் தோன்றி, மிக விரைவாகவே சூரிய அஸ்தமனம் ஏற்பட்டு விடும்.
முக்கியமாக சில பகுதிகளில் வெறும் 7 மணி நேரம் 14 நிமிடங்கள் மட்டுமே இன்றைய தினம் சூரிய வெளிச்சம் இருக்குமாம்.
இதற்கு நேர்மாறாக, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் கோடக்கால சங்கிராந்தி (Summer Solstice) நாள் ஏற்படும்.
அந்த நாளானது நீண்ட பகலையும், குறுகிய இரவையும் கொண்டிருக்கும். அதுவும் பூமியின் அச்சு 23.4 டிகிரி சாய்ந்திருக்கும் காரணத்தினால், பூமியின் வட அரைக்கோளப் பகுதியானது அந்தக் குறிப்பிட்ட மாதத்தில் சூரியனுக்கு அருகில் இருக்கும். இதனாலேயே அந்த நிகழ்வு ஏற்படுகிறது.