800 மில்லியன் பிராட்பேண்ட் இணைப்புகளுடன் உலகிலேயே முதல் இடத்தில் இந்தியா
800 மில்லியனுக்கும் அதிகமான பிராட்பேண்ட் உபயோகிப்பாளர்கள் உடன், உலகிலேயே அதிக தகவல் தொடர்பு வளம் மிக்க நாடக இந்தியா உள்ளதாக, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் (MeITY) இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். 2022 ஆம் ஆண்டின், இந்திய இணைய ஆளுமை மன்றத்தின் (IIGF), நிறைவு விழாவில் பங்கேற்ற அமைச்சர், "5G மற்றும் பாரத்நெட் துணை கொண்டு, மிகப்பெரிய கிராமப்புற பிராட்பேண்ட் இணைப்பு திட்டம் அமையப்பெற்றது. இதன் மூலம் சுமார் 1.2 பில்லியன் மக்கள் பயன்பெற்று இருப்பர்," எனத்தெரிவித்தார். மேலும், புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட ஒழுங்குமுறைக் கொள்கைகள் இது தொடர்பாக அமையப்பெறும் என நம்புவதாக அமைச்சர் கூறினார்.
முதல் இடத்தில் இந்தியா
அமைச்சர் சந்திரசேகர் மேலும் "G 20 மாநாட்டை தலைமை ஏற்க சென்ற பிரதமர் மோடி , 'டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் அவற்றின் நிர்வாக மாதிரியை மாற்ற விரும்பும் அனைத்து நாடுகளுக்கும், அந்த தளத்தை வழங்குவதற்கு இந்தியா தயாராக இருப்பதாக' அறிவித்தார்," எனத்தெரிவித்தார். தொடர்ந்து பேசிய MeitY. செயலாளர், "குடிமக்களின் தனியுரிமை, பாதுகாப்பு, மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் சட்டங்களை உருவாக்குவதை நாங்கள்(அமைச்சரவை) கவனமாக கையாண்டு வருகிறோம். அடுத்த 3 ஆண்டுகளில் டிரில்லியன் டாலர் டிஜிட்டல் பொருளாதாரத்தை உருவாக்க திட்டமிட்டு கொண்டிருக்கிறோம்," எனத்தெரிவித்தார். IIGF 2022 மாநாடு, அரசாங்கம், தொழில்துறை, சிவில் சமூகம் மற்றும் கல்வித்துறை உட்பட, உலகளாவிய இணைய நிர்வாகச் சூழல் அமைப்பில் உள்ள அனைத்து பங்குதாரர்களையும் ஒன்றிணைக்கும் அமைப்பாகும்.