அதிரடியாக 2,200 பேர் பணிநீக்கம் செய்த Indeed நிறுவனம்! காரணம் என்ன?
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் Indeed நிறுவனம் அதன் மொத்த ஊழியர்களில் 2200 ஊழியர்கள் அல்லது 15% பணி நீக்கம் செய்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால், இந்நிறுவனம் பணிநீக்கம் மட்டுமின்றி சம்பள குறைப்பையும் செய்யப்போவதாக கூறப்படுகிறது. குறிப்பாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி கிறிஸ் ஹைம்ஸ் அடிப்படை ஊதியத்தில் இருந்து 25% குறைக்கலாம் என அறிவித்துள்ளார். இதனால் கொரோனாவிற்கு முன் இருந்த வேலை வாய்ப்புகளை விட இனியும் குறையலாம் எனக்கூறப்படுகிறது. காரணம் என்ன? அமெரிக்கவில் பொருளாதார மந்த நிலையை எதிர்கொண்டு வருவதால் இதுபோன்ற பணி நீக்க நடவடிக்கையினை நிறுவனங்கள் எடுத்து வருவதாக கூறப்படுகிறது.