ஐசிஐசிஐ வங்கி கடன் மோசடி: 3 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்
ஐசிஐசிஐ 3,250 கோடி வங்கி கடன் மோசடியில், வங்கியின் முன்னாள் CEO சந்தா கோச்சார், அவரது கணவர் தீபக் கோச்சார் மற்றும் வீடியோகான் குழும நிறுவனர் வேணுகோபால் தூத் ஆகியோர் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. சிபிஐ தனது குற்றப்பத்திரிகையை, மும்பை நகர சிவில் மற்றும் செஷன்ஸ் நீதிமன்றப் பதிவுத் துறையில் சரிபார்ப்புக்காக சமர்பித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கிறது. மேலும், ஐபிசி 120-பி , 409 உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ், குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. சென்ற ஆண்டு டிசம்பர் மாதம், தீபக் கோச்சர் மற்றும் சந்தா கோச்சார் இருவரையும், சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். எனினும், போதிய காரணங்கள் இல்லை எனக்கூறி, சென்ற ஜனவரி மாதம் அவர்களை பெயில்லில் விடுவித்தது நீதிமன்றம்.