இன்ஸ்டாகிராம் ரீல்ஸை பிறர் பதிவிறக்குவதை தடுக்க என்ன செய்ய வேண்டும்?
முன்பு ரீல்ஸை பகிரும் வசதியை மட்டுமே அளித்து வந்த இன்ஸ்டாகிராம், சமீபத்திய அப்டேட் மூலமாக அவற்றை பதிவிறக்கும் செய்யும் வசதியையும் அளித்திருக்கிறது. கடந்த ஜூன் மாதம், அமெரிக்க பயனாளர்களுக்கு மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டிருந்த இந்த வசதியானது, தற்போது உலகெங்கும் உள்ள அனைத்து இன்ஸ்டாகிராம் பயனாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு என இரண்டு இயங்குதளங்களிலும் இந்த வசதியை இன்ஸ்டாகிராம் அறிமுகப்படுத்தியிருக்கிறது. இப்படி பதிவிறக்கம் செய்யப்படும் ரீல்ஸ்களில், அந்தக் குறிப்பிட்ட இன்ஸ்டாகிராம் கணக்கின் பெயர் மற்றும் வாட்டர்மார்க் ஒன்றும் இடம்பெறுகிறது. மேலும், பிற இன்ஸ்டா பயனாளர்கள் நம்முடைய ரீல்ஸை பதிவிறக்குவதை தடுக்கும் வசதியையும் இத்துடன் சேர்த்தே அறிமுகப்படுத்தியிருக்கிறது அத்தளம்.
நம்முடைய இன்ஸ்டாகிராம் ரீல்ஸை பதிவிறக்கம் செய்வதைத் தடுப்பது எப்படி?
தனிப்பட்ட கணக்குகளில் பதிவிடப்படும் ரீல்ஸ்களை பிற பயனாளர்களால் பதிவிறக்கம் செய்ய முடியாது, பகிர மட்டுமே முடியும். பொது கணக்கில் பதிவிடப்படும் ரீல்ஸ்களை மட்டுமே பிற பயனாளர்களால் பதிவிறக்கம் செய்ய முடியும். பொது கணக்கை கொண்டிருப்பவர்களும், பிற பயனாளர்கள் தங்களுடைய ரீல்ஸை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என நினைத்தால், அதனை செட்டிங்கிஸ் சென்று மாற்றிக் கொள்ளலாம். இன்ஸ்டாகிராமின் Settings பகுதிக்குச் சென்று, அங்கே Privacy தேர்வைத் தேர்ந்தெடுத்து, அதில் Reels and Remix and turn off என்பதைக் கிளிக் செய்து நமது தேர்வை மாற்றிக் கொள்ளலாம். அப்படி மாற்றிய பிறகு, பிற நபர்களால் அந்த ரீல்ஸை பதிவிறக்கம் செய்ய முடியாது.