PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ் - மிஸ் பண்ணிடாதீங்க
நாம் மாத மாதம் சம்பாதிக்கும் தொகையில் இருந்து குறிப்பிட்ட தொகையை PF கணக்கிற்கு செல்லும். இந்த தொகை நம் வருங்கால வைப்பு நிதிக்காக பிடிக்கப்படுகிறது. எனவே, பிஎப் கணக்கில் சேரும் பணத்திற்கு வட்டியும் வழங்கப்படும். தேவைப்படும் பட்சத்தில் இடைப்பட்ட நேரத்தில் கூட இந்த பிஎப் தொகையை எடுத்துக்கொள்ள முடியும். இந்நிலையில், PF கணக்கு வைத்து இருக்கும் ஊழியர்களுக்கு முக்கியமான நல்ல செய்தி ஒன்றை மத்திய அறங்காவலர் குழு வெளியிட்டு உள்ளது. அதாவது, அதிக ஓய்வூதியத்தைப் பெற 1995-ன் கீழ், தகுதியான ஓய்வூதியம் பெறுவோர் விண்ணப்பம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், இதற்கான கடைசி தேதி மார்ச் 3ஆம் தேதி வரை இருந்தது. ஆனால் மக்கள் பலர், அதிக ஓய்வூதியம் பெற விரும்புகிறோம்.
அதிக ஓய்வூதியம் - பிஎஃப் கணக்காளர்கள் செய்ய வேண்டியது என்ன?
ஆனால் தேதி முடிந்துவிட்டது. எனவே தேதியை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதனால் அவர்களின் கோரிக்கையை ஏற்று கடைசி தேதியை மே 3, 2023க்கு மத்திய அரசு மாற்றி உள்ளது. இதனடிப்படையில், 2014இல் ஓய்வூதிய வருமான வரம்பு 15 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது. இதற்கு முன்பு 6500 ரூபாயாக இருந்தது. அதேபோன்று, அடிப்படை ஊதியம் 15 ஆயிரத்திற்கு மேல் இருந்தால், ஊழியர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பென்ஷன் தொகைக்கு என்று 8.33 சதவிகிதம் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. எனவே, அதிக பென்ஷன் தொகை பெற விரும்பினால் அதற்கான விண்ணப்பத்தை EPFO தளத்தில் பெற முடியும். அதை பில் செய்து இணையத்தில் விண்ணப்பிக்க முடியும்.