சாம்சங் ஸ்மார்ட்போன் பேட்டரியின் வாழ்நாளை நீட்டிக்க சில வழிமுறைகள்
இன்றைக்கு ஸ்மார்ட்போன்கள் அனைவரின் அத்தியாவசியத் தேவையாகிவிட்டது. அப்படி இருக்கும் போது ஸ்மார்ட்போன்களை வாழ்நாளை நீட்டிக்கச் செய்யும் சில விஷயங்களைக் குறித்து நாம் தெரிந்து கொள்வது அவசியம். ஸ்மார்ட்போனின் முக்கியமான பாகங்களுள் ஒன்று அதன் பேட்டரி. கடந்த சில ஆண்டுகளாக அறிமுகப்படுத்தப்படும் ஸ்மார்ட்போன்களில் பேட்டரிக்களை தனியே எடுக்கும் வசதி அளிக்கப்படுவதில்லை. அதிக பேட்டரி வாழ்நாளைக் கொண்ட ஸ்மார்ட்போனின் வாழ்நாளும் அதிகமாகவே இருக்கும். ஒரு ஸ்மார்ட்போனை வாங்கிப் பயன்படுத்தத் தொடங்கும் போதிருந்தே அதன் பேட்டரியின் சக்தியை தக்கவைக்கும் திறன் கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கிவிடும். எனினும், அடிப்படையான சில பயன்பாட்டு வழிமுறைகளின் மூலமாக பேட்டரியின் வாழ்நாளை நம்மால் நீட்டிக்க முடியும். மேலும், பேட்டரியின் வாழ்நாளை நீட்டிக்கவென்ற சாம்சங் நிறுவனம் சில வசதிகளையும் தங்களுடைய ஸ்மார்ட்போன்களில் அளித்திருக்கிறது.
100% சார்த் ஆவதைத் தவிர்க்க வேண்டும்:
ஒரு ஸ்மார்ட்போனை 100% வரை சார்ஜ் செய்வதையோ, 0% வரை சார்ஜ் தீரும் அளவிற்கு பயன்படுத்துவதையோ தவிர்க்க வேண்டும். 20%/15% பேட்டரி மீதம் இருக்கும் போதே ஸ்மார்ட்போனின் பயன்பாட்டை நிறுத்திவிட்டு சார்ஜ் செய்துவிட வேண்டும். சார்ஜ் செய்வதையும் முழுமையாகச் செய்யாமல், 85% வரை மட்டும் சார்ஜ் செய்ய வேண்டும். இதனை அனைத்து ஸ்மார்ட்போன்களிலும், அனைவராலும் கடைப்பிடிக்க முடியாது. ஆனால், சாம்சங் நிறுவனம் இதற்கென தனி வசதியை தங்கள் ஸ்மார்ட்போன்களில் அளித்திருக்கிறது. அதனைப் பயன்படுத்தி 85% வரை மட்டுமே நம்முடயை ஸ்மார்ட்போன் சார்ஜ் ஆகும் வகையில் அமைப்புகளில் மாற்றம் செய்து கொள்ளலாம். Settings> Battery> Protect Battery to limit your smartphone from charging over 85 per cent
ஃபாஸ்ட் சார்ஜிங்கை தவிர்க்க வேண்டும்:
தற்போது விற்பனை செய்யப்படும் ஸ்மார்ட்போன்களில் ஃபாஸ்ட் சார்ஜிங் என்பது முக்கியமான ஒரு அம்சமாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், வேகமாக சார்ஜ் ஆகும் போனின் பேட்டரி வாழ்நாளும் வேகமாகக் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, தேவைப்படும் போது மட்டும் ஃபாஸ்ட் சார்ஜிங்கைப் பயன்படுத்துவது பரிசீலனை செய்யப்படுகிறது. தேவையில்லாத சமயங்களில் சாதாரண சார்ஜிங்கையே பயன்படுத்தலாம். ஃபாஸ்ட் சார்ஜிங் சார்ஜரைப் பயன்படுத்தியும், மெதுவாக சார்ஜ் ஆகும் வகையிலான ஒரு வசதியை சாம்சங்க தங்களுடைய ஸ்மார்ட்போன்களில் அளித்திருக்கிறது. அதனைப் பயன்படுத்த சாம்சங் வாடிக்கையாளர்கள் பயனடையலாம். Settings> Battery> Charging Settings and disable fast charging
தேவையற்ற பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவது:
நம்முடைய ஸ்மார்ட்போன் பேட்டரியின் தேவையற்ற பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதும் ஸ்மார்ட்போனின் வாழ்நாளை நீட்டிக்கச் செய்யும் வழிகளில் ஒன்று. நாம் நம்முடைய ஸ்மார்ட்போனில் திறந்து வைத்த செயலிகளை சரியான முறையில் மூடியிருக்க வேண்டும். ஆனால், பெரும்பாலான நேரங்களில் நாம் அப்படி செய்யத் தவறுவதன் பலனாக, பின்னணியில் அந்த செயலிகள் செயல்பட்டு நம்முடை பேட்டரியையும் பயன்படுத்திக் கொண்டிருக்கும். அப்படி நாம் அறியாமல் பின்னணியில் இயங்கும் செயலிகள் பேட்டரியைப் பயன்படுத்தாமல் இருப்பதைத் தவிர்க்க ஒரு வசதியை தங்களுடைய ஸ்மார்ட்போன்களில் அளித்திருக்கிறது சாம்சங். Settings> Battery> Background usage limit> unused apps to sleep