இன்ஸ்டா, வாட்ஸ்அப்பில் வைரலாகும் AI காரிகேச்சர் ட்ரெண்ட்; உருவாக்குவது எப்படி?
செய்தி முன்னோட்டம்
சமூக வலைதளங்களில் அவ்வப்போது பல ட்ரெண்டுகள் தோன்றி மறையும். ஆனால், தற்போது வைரலாகி வரும் 'ChatGPT Caricature' ட்ரெண்ட் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. சாதாரண புகைப்படங்களை அழகிய கார்ட்டூன் அல்லது கேலிச்சித்திரங்களாக (Caricatures) மாற்றி, நமது தொழில் மற்றும் ஆளுமையை பிரதிபலிக்கும் வகையில் இந்த ஏஐ தொழில்நுட்பம் மாற்றுகிறது.
ட்ரெண்ட்
ஏன் இந்த ட்ரெண்ட் வைரலாகிறது?
வெறும் புகைப்பட எடிட்டிங் என்பதை தாண்டி, ஒரு பத்திரிகையாளர் குறிப்பேடு வைத்திருப்பது போன்றோ, ஒரு டிசைனர் ஓவியங்களுக்கு நடுவில் இருப்பது போன்றோ அல்லது ஒரு மென்பொருள் பொறியாளர் மடிக்கணினியுடன் இருப்பது போன்றோ மிக நேர்த்தியாகவும் வேடிக்கையாகவும் இந்த தொழில்நுட்பம் படங்களை உருவாக்குகிறது. இது பார்ப்பதற்கு மிகவும் நெருக்கமான உணர்வைத் தருவதால் இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் மற்றும் லிங்க்டுஇன் தளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
வழிமுறைகள்
உங்களுக்கான காரிகேச்சரை உருவாக்குவது எப்படி?
முதலில் ChatGPT-யை திறந்து, உங்களது முகம் தெளிவாக தெரியும்படியான ஒரு நல்ல வெளிச்சமுள்ள புகைப்படத்தை பதிவேற்றவும். Prompt எழுதவும்: "Create a caricature of me and my job based on this photo" என்று குறிப்பிட்டு, உங்களுக்குத் தேவையான ஸ்டைலை (3D, ஓவியம் அல்லது கார்ட்டூன்) விவரிக்கவும். விவரங்களை சேர்க்கவும்: உங்கள் தொழில், பின்னணி சூழல் மற்றும் முகத் தோற்றம் எந்த அளவிற்கு மிகைப்படுத்தப்பட்டு (Exaggerated) இருக்க வேண்டும் என்பதையும் அதில் குறிப்பிடலாம். ஏஐ உருவாக்கிய படம் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், "பின்னணியை மாற்று" அல்லது "இன்னும் கொஞ்சம் சிரிப்பது போல்" என்று கூறி மீண்டும் திருத்தம் செய்து கொள்ளலாம்.