விண்வெளி உடைகளின் பாகங்கள் மற்றும் அவற்றைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்
விண்வெளி, விண்வெளி பயணம் என்றாலே சுவாரஸ்யங்களுக்கு குறைவே இல்லை. அதில் விண்வெளி உடைகள் பற்றிய சில தகவல்கள் இங்கே. விண்வெளி உடையில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று விண்கலத்தின் உள்ளே இருக்கும் போது அணிவது, மற்றொன்று விண்வெளியில் நடப்பதற்காக அணிவது. விண்வெளி உடைகளில் 16 அடுக்குகள் உள்ளன, தீவிர வெப்பநிலை, தூசி, கதிர்வீச்சு போன்றவற்றை தாங்கும் திறன் கொண்டவை. விண்வெளி நடைப்பயணங்களுக்கு பயன்படுத்தப்படும் ஸ்பேஸ்சூட்களில் இரண்டு முக்கிய பிரிவுகள் உள்ளன: பிரஷர் கார்மென்ட் & லைஃப்-சப்போர்ட் சிஸ்டம். முந்தையது மனித உடலின் வடிவில் உள்ள ஆடைகளில் குளிரூட்டும் ஆடை, மேல் உடற்பகுதி, கீழ் உடற்பகுதி மற்றும் தலைக்கவசம் ஆகியவை உள்ளன. லைஃப் சப்போர்ட் சிஸ்டம், சுவாசத்திற்கு ஆக்ஸிஜனையும், சூட்டை குளிர்விக்க தண்ணீரையும் வழங்குகிறது.
விண்வெளி உடைகளில் என்னென்ன இருக்கின்றன
குளிரூட்டும் ஆடை, நீட்டிக்கப்பட்ட ஸ்பான்டெக்ஸ் மற்றும் நீர் குழாய்களால் ஆனது. இந்த ஆடை தலை, கைகள் மற்றும் கால்களைத் தவிர முழு உடலையும் மூடுகிறது. குழாய்கள் வழியாக ஓடும் குளிர்ந்த நீர், உடலின் வெப்பநிலையை ஒழுங்குபடுத்துகிறது மற்றும் விண்வெளி நடைப்பயணத்தின் போது கூடுதல் வெப்பத்தை நீக்குகிறது. மேல் உடற்பகுதி, சூட்டின் உட்புறத்தை லைஃப் சப்போர்ட் சிஸ்டம் அமைப்புடன் இணைக்கிறது. இது ஸ்லீவ்லெஸ் ஷர்ட் வடிவில் இருக்கும். சூட்டின் கீழ் பகுதியில், ஒரு இடுப்பு கச்சை, பேன்ட் மற்றும் பூட்ஸ் ஆகியவை அடங்கும். லைஃப் சப்போர்ட் சிஸ்டம், தோள்களில் சுமக்கும் பாக் போன்ற வடிவில் வரும். இது ஆக்ஸிஜனைக் கொண்டுள்ளது. சூட் பிரஷரைப் பராமரிக்க ஒரு ரெகுலேட்டர் மற்றும் ஆக்ஸிஜன் சுழற்சிக்கான மின்விசிறி உள்ளது.