Loading...
இலவச Wi-Fi பயன்படுத்துபவரா நீங்கள்? ஹேக்கர்களின் புதிய 'கேப்டிவ் கிரஞ்ச்' தாக்குதல் குறித்து மைக்ரோசாப்ட் எச்சரிக்கை
ஹேக்கர்களின் புதிய 'கேப்டிவ் கிரஞ்ச்' தாக்குதல் குறித்து மைக்ரோசாப்ட் எச்சரிக்கை

இலவச Wi-Fi பயன்படுத்துபவரா நீங்கள்? ஹேக்கர்களின் புதிய 'கேப்டிவ் கிரஞ்ச்' தாக்குதல் குறித்து மைக்ரோசாப்ட் எச்சரிக்கை

எழுதியவர் Venkatalakshmi V
Aug 10, 2026
02:35 pm

செய்தி முன்னோட்டம்

சுற்றுலா மற்றும் தொழில்முறை பயணங்களின் போது ஓட்டல்களில் வழங்கப்படும் இலவச Wi-Fi சேவையை பயன்படுத்துபவராக நீங்கள் இருந்தால், நொடி பொழுதில் உங்களின் தனிப்பட்டத் தகவல்களும் பாஸ்வோர்டுகளும் ஹேக்கர்களால் திருடப்பட கூடிய அபாயம் உருவாகியுள்ளது. ரஷ்யாவுடன் தொடர்புடைய 'மிட்நைட் பிளிஸார்ட்' அமைப்பின் கிளைக் குழுவான 'ஸ்டார்ம்-2945', உலகெங்கிலும் உள்ள ஓட்டல்கள் மற்றும் பொது இடங்களின் வைஃபை இணைப்புகளை இலக்காக்கி 'கேப்டிவ் கிரஞ்ச்' என்ற இணைய தாக்குதலை நடத்தி வருவதாக மைக்ரோசாப்ட் அச்சுறுத்தல் நுண்ணறிவு மையம் எச்சரித்துள்ளது.

செயல்பாடு

ஹேக்கர்களின் தந்திரமான முறை

ஓட்டல் வைஃபை இணைப்பில் நுழையும் போது தோன்றும் உள்நுழைவு பக்கங்களை ஹேக்கர்கள் தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவருகின்றனர்.

பின்னர், விண்டோஸ் அல்லது கூகுள் பாதுகாப்பு அப்டேட் போன்ற போலி அறிவிப்புகளைக் காட்டி, பயனர்களை தவறான சாப்ட்வேர்களை பதிவிறக்கம் செய்ய வைக்கின்றனர்.

இதன் மூலம் சாதனங்களின் முழு அதிகாரத்தையும் ஹேக்கர்கள் கைப்பற்றுகின்றனர்.

இந்தத் தாக்குதலின் போது 'CornFlake' மற்றும் 'ChocoShell' ஆகிய இரு ஆபத்தான வைரஸ்கள் பயனர்களின் சாதனங்களில் உட்செலுத்தப்படுகின்றன.

இதன் மூலம் விசைப்பலகை அழுத்தங்கள், மைக்ரோசாப்ட் 365 லாகின் விவரங்கள், பாஸ்வோர்ட்கள், புகைப்படங்கள் மற்றும் ஆடியோ-வீடியோ பதிவுகள் வரை அனைத்து ரகசியத் தரவுகளையும் ஹேக்கர்களால் திருட முடியும்.

பாதுகாப்பு

பாதுகாப்பாக இருப்பதற்கான வழிகள்

இலவச அல்லது பொது வைஃபை நெட்வொர்க்குகளை நம்பகமானதாகக் கருத வேண்டாம் என்று மைக்ரோசாப்ட் அறிவுறுத்துகிறது.

பயணங்களின் போது மொபைல் ஹாட்ஸ்பாட் அல்லது தனிப்பட்ட இணைப்புகளைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது.

மேலும், வைஃபை இணைப்பின் போது தோன்றும் எந்தவொரு மென்பொருள் அல்லது உலாவி புதுப்பிப்பு கோரிக்கைகளையும் பதிவிறக்கம் செய்யக் கூடாது.

ADVERTISEMENT