Loading...
GTA 6 வெளியீடு: 13 ஆண்டுகால காத்திருப்புக்கு பிறகு நவம்பர் 19 நள்ளிரவில் ரிலீஸ், இந்தியாவில் விலை என்ன?
நவம்பர் 19 நள்ளிரவில் GTA 6 வெளியாகிறது

GTA 6 வெளியீடு: 13 ஆண்டுகால காத்திருப்புக்கு பிறகு நவம்பர் 19 நள்ளிரவில் ரிலீஸ், இந்தியாவில் விலை என்ன?

எழுதியவர் Venkatalakshmi V
Nov 18, 2026
06:33 pm

செய்தி முன்னோட்டம்

உலகெங்கிலும் உள்ள கேமிங் பிரியர்கள் சுமார் 13 ஆண்டுகளாக ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த 'கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ VI' (GTA 6) வீடியோ கேம், நவம்பர் 19-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. ராக்ஸ்டார் கேம்ஸ் நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த பிரம்மாண்ட கேம், பிளேஸ்டேஷன் 5 மற்றும் எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் X|S ஆகிய தளங்களில் வெளியாவதற்கு முன்பே முன்பதிவுகளில் சாதனை படைத்துள்ளது.

அட்டவணை

இந்தியாவில் வெளியாகும் நேரம் & உலகளாவிய அட்டவணை

ராக்ஸ்டார் கேம்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, அந்தந்த நாடுகளின் உள்ளூர் நேரப்படி நள்ளிரவு 12:00 மணிக்கு இந்த கேம் அன்லாக் செய்யப்படும்.

இந்திய நேரப்படி நவம்பர் 19 நள்ளிரவு 12:00 மணிக்கு விளையாடக் கிடைக்கும்.

நேர மண்டல அடிப்படையில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு முன்பாகவே ஆஸ்திரேலியா, ஜப்பான், தென் கொரியா மற்றும் ஆசிய-பசிபிக் நாடுகளில் உள்ள வீரர்கள் GTA 6 கேமை அணுக முடியும்.

தற்போதைக்கு PS5 மற்றும் Xbox Series X|S கன்சோல்களில் மட்டுமே வெளியாகிறது; Windows PC பதிப்பு இப்போதைக்கு வெளியிடப்படவில்லை.

முன்பதிவு விவரங்கள்

வெளியீட்டிற்கு முன்பே $1.45 பில்லியன் வசூல்

சென்சார் டவர் ஆய்வு நிறுவனத்தின் மதிப்பீட்டின்படி, நவம்பர் 16-ஆம் தேதி வரை GTA 6 கேம் படைத்துள்ள வணிகச் சாதனைகள்:

மொத்த முன்பதிவுகள்: சுமார் 1.494 கோடி பிரதிகள்

முன்பதிவு மூலம் கிடைத்த வருவாய்: சுமார் $1.45 பில்லியன் (இந்திய மதிப்பில் ரூ.12,000 கோடிக்கு மேல்)

பிளேஸ்டேஷன் 5 (PS5) பங்கு: 75% (பெரும்பாலான முன்பதிவுகள்)

எக்ஸ்பாக்ஸ் பங்கு: 25%

(குறிப்பு: ராக்ஸ்டார் கேம்ஸ் மற்றும் அதன் தாய் நிறுவனமான டேக்-டூ இன்டராக்டிவ் இதுவரை நாடு வாரியான அதிகாரப்பூர்வ விற்பனை புள்ளிவிவரங்களை வெளியிடவில்லை).

ADVERTISEMENT

GTA 6 விலை

இந்தியாவில் GTA 6 விலை என்ன?

உலகின் மற்ற முக்கிய நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியாவில் GTA 6 கேமின் விலை குறைவாகவே நிர்ணயிக்கப்பட்டுள்ளது:

ஸ்டாண்டர்ட் எடிஷன்: ₹5,999 (PlayStation Store மற்றும் Xbox Store)

அல்டிமேட் எடிஷன் (Ultimate Edition): ₹7,49 (கூடுதல் பிரத்யேக அம்சங்களுடன்)

கேமிங் ஆய்வு நிறுவனமான நியூசூ கணிப்பின்படி, GTA 6 வெளியான முதல் வார இறுதிக்குள் 3.7 கோடி முதல் 5.1 கோடி பிரதிகள் வரை விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் மூலம் முதல் வாரத்திலேயே $3.25 பில்லியன் முதல் $5.2 பில்லியன் வரை வருவாய் ஈட்டி, பொழுதுபோக்குத் துறையின் அனைத்து சாதனைகளையும் GTA 6 முறியடிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT