சந்தேகத்திற்குரிய ஸ்பேம் அழைப்புகளை கண்டுபிடிக்க உதவும் கூகிள் வாய்ஸ்
செய்தி முன்னோட்டம்
சமீப காலங்களில், ஸ்பேம் அழைப்புகளும், குறுஞ்செய்திகளும் அதிகரித்து வருகிறது.
அமெரிக்காவில் வெளியான ஒரு அறிக்கையின் படி, பொது மக்கள், மாதத்திற்கு சுமார் 4 பில்லியன் ரோபோகால்களைப் பெறுகின்றனர் என்றும், மோசடி அழைப்புகளால் கிட்டத்தட்ட $30 பில்லியன் இழந்துள்ளனர் என்றும் தெரிவிக்கிறது.
உங்கள் எண்ணிற்கு வரும், சந்தேகத்திற்குரிய ஸ்பேம் அழைப்புகளை உணர்த்த, இப்போது கூகிள் வாய்ஸ் உதவுகிறது.
"தேவையற்ற அழைப்புகள் மற்றும் தீங்கு விளைவிக்கும் மோசடிகளில் இருந்து" உங்களைப் பாதுகாக்க உதவும் வகையில் இந்த அம்சம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூகிள் கூறுகிறது.
அத்தகைய ஸ்பேம் அழைப்புகளை, தெளிவாகக் குறிக்கும் வண்ணம், பெரிய சிவப்பு ஆச்சரியக்குறியுடன் கூகிள் வாய்ஸ் அறிவிக்கும், என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
"சந்தேகத்திற்குரிய ஸ்பேம் அழைப்பாளர்" என்ற குறியீட்டுடன், அந்த அழைப்பு உங்களுக்கு காட்டப்படும்.
மேலும் படிக்க
கூகிள் வாய்ஸ்
எதிர்காலக் குறிப்புக்காக, அது கால் ஹிஸ்டரியிலும் காண்பிக்கப்படும்.
பெறப்படும் அழைப்பு ஸ்பேம் தான், என்று நீங்கள் உறுதி செய்த பின்னர், அந்த எண்ணிலிருந்து வரும் அனைத்து அழைப்பும், நேராக வாய்ஸ் மெயில்லிற்கு சென்றுவிடும்.
ஆனால் அந்த எண் ஸ்பேம் அழைப்பாளர் இல்லை, என்று உறுதிசெய்தால், அதற்கான எச்சரிக்கை குறியீடு மீண்டும் காட்டப்படாது.
இந்த அம்சத்திற்கான ஸ்பேம் அழைப்பாளர்களைக் கண்டறிய, கூகிளின், சுற்றுச்சூழல் அமைப்பு பயன்படுத்தும், ஸ்பேம் அழைப்புகளை அடையாளம் காணும் அதே செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துகிறது. அந்த AI போட், சராசரியாக ஒரு மாதத்திற்கு, பில்லியன் கணக்கான ஸ்பேம் அழைப்புகளை வடிகட்டுகிறது.
எனினும் இந்த கூகிள் வாய்ஸ்-ஐ உங்கள் செட்டிங்ஸ்-இல் நீங்க தேர்வு செய்து இருந்தால் மட்டுமே, செயல்படும்.