LOADING...
கூகுள் தேடலில் திடீர் ஏஐ கோளாறு! வைரலாகும் வினோத பதில்கள் - நெட்டிசன்கள் கிண்டல்
கூகுள் சர்ச்சில் வினோத ஏஐ குளறுபடி

கூகுள் தேடலில் திடீர் ஏஐ கோளாறு! வைரலாகும் வினோத பதில்கள் - நெட்டிசன்கள் கிண்டல்

எழுதியவர் Sekar Chinnappan
May 23, 2026
06:14 pm

செய்தி முன்னோட்டம்

கூகுள் தேடுபொறியில் (Google Search) 'Disregard' என்ற ஆங்கில வார்த்தையைத் தேடிய பயனர்களுக்கு, ஏஐ சாட்பாட் போன்ற வினோதமான பதில்கள் காட்டியது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. கூகுள் நிறுவனம் சமீபகாலமாகத் தனது தேடுபொறியில் ஏஐ ஓவர்வியூ (AI Overview) தொழில்நுட்பத்தை தீவிரமாக இணைத்து வரும் நிலையில் இத்தகைய தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. கூடுதல் விபரங்கள் இங்கே:-

வினோத பதில்கள்

வைரலான கூகுள் ஏஐயின் வினோத பதில்கள்

பொதுவாக கூகுளில் 'Disregard' (புறக்கணி அல்லது கவனிக்காதே) என்று தேடினால், அதற்கான அகராதி பொருளும் (Dictionary Definition) நீல நிற இணையதள லிங்குகளும் மட்டுமே திரையில் தோன்றும். ஆனால் மே 22 அன்று, இந்த வார்த்தையைத் தேடிய பயனர்களுக்குக் கூகுளின் ஏஐ ஓவர்வியூ பகுதி, "புரிந்துகொண்டேன். உங்களுக்கு ஏதேனும் புதிய கேள்வி இருந்தால் என்னிடம் கேளுங்கள்" (Understood. Let me know whenever you have a new prompt or question) என்று பதிலளித்துள்ளது. இது தேடுபொறியின் பதில் போல இல்லாமல், ஏதோ ஒரு ஏஐ சாட்பாட் உதவியாளருடன் தவறுதலாக உரையாடுவது போன்ற உணர்வை வாசகர்களுக்கு ஏற்படுத்தியது.

ஆச்சரியமூட்டும் பதில்கள்

மற்ற வார்த்தைகளுக்கும் கிடைத்த ஆச்சரியமூட்டும் பதில்கள்

இக்கோளாறைத் தொடர்ந்து பயனர்கள் 'Forget' (மறந்துவிடு) மற்றும் 'Disappointed' (ஏமாற்றம்) போன்ற பிற உணர்ச்சிப்பூர்வமான வார்த்தைகளையும் தேடிப் பரிசோதித்தனர். 'Forget' என்று தேடியதற்கு அந்த ஏஐ, "நான் உங்களைக் கவனிக்கத் தயாராக உள்ளேன். பழைய நினைவுகளைத் துடைக்க வேண்டுமா அல்லது புதிய தலைப்பில் தொடங்கலாமா?" என்று மனிதனைப் போல உரையாடியுள்ளது. அதேபோல் 'Disappointed' என்று தேடியபோது, "விஷயங்கள் நீங்கள் எதிர்பார்த்தபடி நடக்காததற்கு நான் வருந்துகிறேன். உங்கள் மனக் குறைகளைக் கொட்ட நினைத்தால் நான் கேட்கத் தயாராக இருக்கிறேன்" என்று ஏஐ மிகவும் உருக்கமாகப் பதிலளித்துள்ளது.

Advertisement

கிண்டல்

நெட்டிசன்களின் கிண்டலும் மெரியம்-வெப்ஸ்டர் பதிவும்

இந்த வினோதக் குளறுபடியின் ஸ்கிரீன்ஷாட்டுகள் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி, நெட்டிசன்களின் கடுமையான விமர்சனங்களுக்கும் கேலிகளுக்கும் உள்ளாகின. உலகப் புகழ்பெற்ற அகராதி நிறுவனமான மெரியம்-வெப்ஸ்டர் (Merriam-Webster), தனது எக்ஸ் பக்கத்தில் 'Disregard' வார்த்தையின் உண்மையான பொருளைப் பகிர்ந்து, கூகுளின் இந்தத் தவற்றை மறைமுகமாகக் கிண்டல் செய்துள்ளது. "கூகுள் நிறுவனம் ஏன் தனது சொந்த பிராண்ட் மதிப்பைத் தானே அழித்துக் கொள்ளத் துடிக்கிறது?" என்று பல தொழில்நுட்ப ஆர்வலர்கள் இந்த ஏஐ தேடல் முறைக்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Advertisement

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

நடவடிக்கை

கூகுள் எடுத்த உடனடி நடவடிக்கை

இந்த விவகாரம் இணையத்தில் பூதாகரமானதைத் தொடர்ந்து, கூகுள் நிறுவனம் அந்த ஏஐ ஓவர்வியூ (AI Overview) அம்சத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்ததாகத் தெரிகிறது. தற்போதைய நிலையில் இக்கோளாறு சரிசெய்யப்பட்டு, 'Disregard' என்று தேடினால் வழக்கம்போல அதன் அகராதி பொருள் மட்டுமே திரையில் காட்டப்படுகிறது. இருப்பினும், இந்த ஏஐ தொழில்நுட்பக் குளறுபடி குறித்துக் கூகுள் நிறுவனம் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு விளக்கத்தையும் பொதுவெளியில் அளிக்கவில்லை.

Advertisement