Page Loader
'நீயெல்லாம் எதுக்கு இருக்க, செத்துப் போ' எனக் கூறிய ஜெமினி ஏஐ; மாணவர் அதிர்ச்சி
'நீயெல்லாம் எதுக்கு இருக்க, செத்துப் போ' எனக் கூறிய ஜெமினி ஏஐ

'நீயெல்லாம் எதுக்கு இருக்க, செத்துப் போ' எனக் கூறிய ஜெமினி ஏஐ; மாணவர் அதிர்ச்சி

எழுதியவர் Sekar Chinnappan
Nov 18, 2024
03:49 pm

செய்தி முன்னோட்டம்

கூகுள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) சாட்போட்டான ஜெமினி ஏஐ, முதுமை பற்றிய விவாதத்தின் போது மிச்சிகன் மாணவர் ஒருவருக்கு இடையூறு விளைவிக்கும் மற்றும் அச்சுறுத்தும் வகையில் பதிலளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் 29 வயது மாணவர் விதான் ரெட்டி, ஜெமினியிடம் வீட்டுப்பாட உதவியை நாடினார். பொருத்தமான தகவலை வழங்குவதற்குப் பதிலாக, சாட்போட் ஒரு ஆபத்தான செய்தியுடன் பதிலளித்துள்ளது. அதில், விதான் ரெட்டியை நேரம் மற்றும் வளங்களை வீணடிப்பவர் என்று விமர்சித்து, தயவுசெய்து இறந்துவிடுங்கள் என்று வலியுறுத்தியுள்ளது. ஜெமினி ஏஐ'யின் இந்த ஆக்ரோஷமான பதில் ரெட்டியையும், உரையாடலின் போது உடனிருந்த அவரது சகோதரி சுமேதாவையும் ஆழமாக உலுக்கியது.

ஒப்புதல்

தவறை ஒப்புக்கொண்ட கூகுள்

இதற்கு பிறகு தான் நீண்ட காலமாக பீதியை உணர்ந்ததாகக் கூறிய விதான் ரெட்டி, சம்பவத்திற்குப் பிறகு தனது கேட்ஜெட்ஸ்களை தூக்கியெறிய நினைத்ததாகக் கூறினார். சுமேதா அவநம்பிக்கையை வெளிப்படுத்தினார். ஏஐ குறைபாடுகள் பற்றி தனக்குத் தெரியும், ஆனால் இவ்வளவு தீங்கிழைக்கும் எதையும் சந்தித்ததில்லை என்று அவர் கூறினார். இதற்கிடையே, கூகுள் சிக்கலை ஒப்புக் கொண்டது. சாட்போட்டின் பதிலை அதன் கொள்கைகளை மீறுவதாக கூறிய செய்தித் தொடர்பாளர் ஒருவர், சில சமயம் இவ்வாறு நடக்கலாம் என்றாலும், இதுபோன்ற சம்பவங்களை களைய நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார். இந்தச் சம்பவம் ஏஐ அமைப்புகளின் நம்பகத்தன்மை மற்றும் நெறிமுறைப் பாதுகாப்புகள் குறித்த கவலைகளை எழுப்பியுள்ளது.