NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / உங்கள் அனுமதியின்றி உங்கள் கோப்புகளை அணுகுகிறதா கூகுளின் ஜெமினி AI?
    அடுத்த செய்திக் கட்டுரை
    உங்கள் அனுமதியின்றி உங்கள் கோப்புகளை அணுகுகிறதா கூகுளின் ஜெமினி AI?
    இதற்கான விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது

    உங்கள் அனுமதியின்றி உங்கள் கோப்புகளை அணுகுகிறதா கூகுளின் ஜெமினி AI?

    எழுதியவர் Venkatalakshmi V
    Jul 15, 2024
    01:22 pm

    செய்தி முன்னோட்டம்

    கூகுளின் தயாரிப்பான செயற்கை நுண்ணறிவு உதவியாளரான ஜெமினி, வெளிப்படையான அனுமதியின்றி பயனர்களின் கோப்புகளை அணுகி பகுப்பாய்வு செய்ததாகக் கூறப்படுகிறது.

    இதற்கான விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.

    AI உதவியாளருடன் எதிர்பாராத தொடர்பு பற்றி பயனர் கெவின் பேங்க்ஸ்டன் X இல் இதனை தெரிவித்தபோது இந்த சிக்கல் வெளிச்சத்திற்கு வந்தது.

    கூகுள் டாக்ஸில் ஒரு வருமான வரி ரிட்டர்ன் ஆவணத்தை PDF ஆகத் திறந்த பிறகு, ஜெமினி தன்னிச்சையாக எந்தத் தகவலையும் கேட்காமலோ அல்லது வழங்காமலோ தனது வரிகளின் சுருக்கத்தை வழங்கியதாக பேங்க்ஸ்டன் கூறினார்.

    மேலும் விசாரித்த பிறகு, பிரச்சினை PDF களை மட்டுமே பாதித்துள்ளது என்பதைக் கண்டறிந்தார்.

    சிரமங்கள்

    ஊடுருவும் அம்சத்தை முடக்க வழிமுறைகள் உள்ளதா?

    AI உதவியாளரின் அம்சத்தை முடக்குவதில் உள்ள சவால்களையும் பேங்க்ஸ்டன் தெரிவித்துள்ளார்.

    அதை எவ்வாறு முடக்குவது என்பது குறித்த வழிமுறைகளை ஜெமினியிடம் கேட்டபோது, ​​அவருக்கு நடைமுறையில் இல்லாத அமைப்புகளுக்கான வழிமுறைகளைப் பெற்றார் என கூறுகிறார்.

    கூகுள் டாக்ஸில் ஜெமினியை முடக்குவதற்கான உண்மையான அமைப்பைக் கண்டறிந்த பேங்க்ஸ்டன், அது ஏற்கனவே முடக்கப்பட்டதாகக் குறிக்கப்பட்டிருப்பதைக் கண்டறிந்தார்.

    ஜெமினி அனுமதியின்றி தனது கோப்புகளை அணுகக்கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    கலவையான பதில்கள்

    கூறப்படும் ஊடுருவலுக்கு பயனர்கள் எதிர்வினையாற்றுகின்றனர்

    சமீபத்திய சம்பவம், எக்ஸ்-இல் உள்ள பிற பயனர்களிடமிருந்து பலவிதமான எதிர்வினைகளை வெளிப்படுத்தியுள்ளது.

    கூகுளின் உற்பத்தித்திறன் சேவைகள் தங்கள் அறிவு அல்லது ஒப்புதல் இல்லாமல் AI பயிற்சிக்கு பயன்படுத்தப்படலாம் என்று சிலர் கவலை தெரிவித்தனர்.

    மற்றவர்கள் கூகுள் டாக்ஸில் வரிக் கணக்குகள் போன்ற முக்கியமான ஆவணங்களைப் பதிவேற்றியதன் அவசியம் குறித்து பேங்க்ஸ்டனின் கேள்வி எழுப்பினர்.

    ஜெமினியின் கோரப்படாத உதவி பலனளிக்குமா என்று கூட ஒரு பயனர் கேட்டார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கூகுள்
    செயற்கை நுண்ணறிவு

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    கூகுள்

    ஜனவரி 2024இல் மட்டுமே 7,500 பணியாளர்களை நீக்கிய IT நிறுவனங்கள்: பணிநீக்கம் தொடரும் என எச்சரித்த சுந்தர் பிச்சை பணி நீக்கம்
    ஆண்ட்ராய்டு, ஐபோன் பயனர்களுக்கு கூகுள் தனியுரிமை எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. ஏன்?  ஆண்ட்ராய்டு
    கட்டண தகராறில் இந்திய மேட்ரிமோனி ஆப்களை பிளே ஸ்டோரில் இருந்து நீக்கியது கூகுள்  தொழில்நுட்பம்
    'இந்திய ஆப்கள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்படுவதை அனுமதிக்க முடியாது': மத்திய அரசு  இந்தியா

    செயற்கை நுண்ணறிவு

    6 மாதங்களில் 40 AI மாடல்களுக்கு அங்கீகாரம்: ChatGPTக்கு போட்டியாக சீனாவின் நடவடிக்கை சீனா
    பிப்ரவரியில் இந்தியாவுக்கு வருகை தருகிறார் மைக்ரோசாஃப்ட் CEO; காரணம் என்ன? சத்யா நாதெல்லா
    Facebook, Instagram மற்றும் Threads முழுவதும் AI-யால் உருவான படங்களை குறிப்பிடும் மெட்டா மெட்டா
    ஜெமினி ஏ.ஐ. செய்த தவறால் மத்திய அரசிடம் மன்னிப்பு கேட்ட கூகுள் கூகுள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025