Page Loader
ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை! 
ஆண்ட்ராய்டு 14 பீட்டாவை வெளியிட்டது கூகுள்

ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை! 

எழுதியவர் Prasanna Venkatesh
Apr 13, 2023
11:09 am

செய்தி முன்னோட்டம்

பொதுப்பயனர்களுக்கான ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தின் பீட்டா (Beta) வெர்ஷனை தற்போது வெளியிட்டிருக்கிறது கூகுள். ஆண்ட்ராய்டு 13 வெளியீட்டிற்குப் பிறகு தற்போது ஆண்ட்ராய்டு 14-ஐ உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறது கூகுள். கூகுளின் அறிவிப்பின்படி, அடுத்த இரண்டு மாதங்களுக்கு பீட்டா வெர்ஷனைக் கொண்டு சோதனை செய்யப்படும் எனவும், அதன் பிறகு இந்த ஆண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் ஆண்ராய்டு 14-ன் உறுதிதன்மைகான மேம்பாடுகள் செய்யப்படும் எனவும், ஆகஸ்ட் மாதம் ஆண்ட்ராய்டு 14-ன் இறுதிக் கட்டமைப்பு வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கூகுள் பிக்ஸல் 4, 4a, 5, 5a, 6, 6 ப்ரோ, 7 மற்றும் 7 ப்ரோ ஆகிய மாடல்களில் ஆண்டராய்டு 14 பீட்டாவை தரவிறக்கம் செய்து பயன்படுத்த முடியும்.

ஸ்மார்ட்போன்

என்னென்ன வசதிகள்? 

என்னென்ன வசதிகளை இந்த புதிய இயங்குதளத்தில் கூகுள் அளிக்கப்போகிறது என முழுமையான தகவலை இன்னும் கூகுள் அளிக்கவில்லை. எனினும், இந்த ஆண்ட்ராய்டு புதுப்பிப்பு வெர்ஷனில், இயங்குதளத்தில் இருக்கும் கிராபிக்ஸ், பாதுகாப்பு அம்சங்கள், நாம் தனிப்பட்ட முறையில் மாற்றிக் கொள்ள நினைக்கும் வசதிகளை கூகுள் மேம்படுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு செயலிக்கும் நாம் விரும்பும் மொழியை தேர்வு செய்து பயன்படுத்தும் வசதியையும் கூகுள் இந்த இயங்குதளத்தில் கொடுக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இயங்குதளத்தை உருவாக்கும் பணிகள் முழுமையாக முடியாத நிலையில், இன்னும் பல புதிய வசதிகளை கூகுள் இந்த இயங்குதளத்தில் கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.