காதலர் தினத்தில் அற்புதமான டூடுல் வெளியிட்ட கூகுள்!
உலகம் முழுவதும் பிப்ரவரி 14 ஆம் தேதியான இன்று காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி, கூகுள் முக்கிய நாட்கள் , பிரபலங்களின் பிறந்த நாட்கள் பண்டிகை காலங்களில் அதன் தேடு பொறியில் புதிய டூடுலை மாற்றியமைக்கும். அந்த வகையில், காதலர் தினத்தில் மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் கூகுள் நிறுவனம் தனது டூடுலை மாற்றியமைத்தள்ளது. அதிலும், இன்று வெளியிட்டுள்ள சிறப்பு டூடுலில் நீர் துளிகள் ஒன்றாக இணையும் போது ஹார்ட்டின் அமைப்பு வருவதை போன்ற டூடுலை வெளியிட்டுள்ளது. காதலர் தின வரலாறு காதலர் தினத்தின் தோற்றத்திற்குப் பின்னால் பல கதைகள் உள்ளன. பிப்ரவரியில் நடைபெற்ற ரோமானிய திருவிழாவான லூபர்காலியாவில் தோன்றியது.
உலகம் முழுவதும் கொண்டாடும் காதலர் தினம் - வரலாறு என்ன?
வசந்த காலத்தின் துவக்கத்தின் போது கொண்டாடப்படும் இந்த திருவிழாவில், பெண்கள் ஆண்களுடன், லாட்டரி மூலம் ஜோடியாக இணைக்கப்பட்டனர். போப் கெலாசியஸ் I , இந்த பண்டிகையை புனித காதலர் தினமாக மாற்றியதாக நம்பப்படுகிறது. 14ஆம் நூற்றாண்டில் இருந்து, இது ஒரு காதல் திருநாளாக கொண்டாடப்பட்டு வருகிறது என்றும் கூறப்படுகிறது. ரோமானிய நகரில், ஆண்களை போருக்கு செல்லாமல் காப்பதற்காக, அவர்களுக்கு ரகசிய திருமணம் செய்து வைத்த குற்றத்திற்காக, இரண்டாம் கிளாடியஸால் தூக்கிலிடப்பட்ட வேலண்டைன் என்ற பாதிரியாரின் நினைவாக, இந்நாளை கொண்டாட துவங்கினர் என்றும் கூறப்படுகிறது.