ChatGPT AI பார்த்து பயந்து புதிதாக ஒரு AI யை உருவாக்கும் கூகுள்!
உலகில் சமீபகாலமாகவே ChatGPT எனும் AI கருவி ஒன்று பெரும் புரட்சியையே ஏற்படுத்திவருகிறது. இது, மனிதர்கள் செய்யும் வேலையை தானாகவே செய்து விடுகிறது. எடுத்துக்காட்டாக நாம் கூகுளில் ஒரு விஷயத்தை தேடும் போது அது கூடுதலாக பல்வேறு ஆப்ஷன்களை வழங்கும். ஆனால், இந்த ChatGPT AI மூலம் செய்தால், நாம் என்ன தேடல் செய்கிறோமோ அதைப்பற்றி தானாகவே AI மூலம் ஆராய்ந்து சரியான விவரத்தை மட்டுமே அளிக்கிறது. இதனாலே இதை பலர் பயன்படுத்த தொடங்கிவிட்டார்கள். கூகுள் நிறுவனத்திற்கு இதுவரை இல்லாத அளவிற்கு பயங்கர போட்டியாக இந்த செயலி உருவெடுத்துள்ளது. இதனால், கூகுள் நிறுவனம் Larry Page மற்றும் Sergey Brin இதற்கு போட்டியாக 20க்கும் மேற்பட்ட AI கருவிகளை உருவாக்க திட்டமிட்டுள்ளார்கள்.
ChatGPT AI செயலிக்கு போட்டியாக கூகுளின் புதிய AI திட்டம்
இந்த AI கருவிகள் வரும் மே மாதம் அறிமுகம் செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதற்கு முன் கூகுள் இதேபோன்று AI கருவிகளான Duplex மற்றும் Google Glass போன்றவற்றை அறிமுகம் செய்தது. அதேப்போல், Image எடிட்டிங் கருவி ஒன்றையும் உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. சமீபத்தில் கூட 12 ஆயிரம் ஊழியர்களை கூகுள் நிறுவனம் நீக்கியதற்கு ஒரு காரணமாக AI தொழில்நுட்பத்தை உருவாக்க பல மில்லியன் டாலர்கள் செலவாகியது தான் என கூறப்படுகிறது. இதுபோன்ற AI செயலிகளை கூகுள் மூலம் தேடினால் நமக்கு கூகுள் நிறுவனத்தின் Demo AI விவரங்கள் கிடைக்கின்றன. Chat GPT போன்ற ஒரு AI உருவாக்கினால் நிறுவனத்தின் பெயர் கெட்டுவிடும் என்று கூறிவந்த கூகுள் தான் ஒரு AI கருவியை உருவாக்கிவருகிறது.