NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / இனி உங்கள் காணாமல் போன ஆண்ட்ராய்டு சாதனங்களை கூகுள் துணையுடன் கண்டுபிடிக்கலாம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    இனி உங்கள் காணாமல் போன ஆண்ட்ராய்டு சாதனங்களை கூகுள் துணையுடன் கண்டுபிடிக்கலாம்
    ஆப்பிளின் ஃபைண்ட் மை அம்சத்திற்கு போட்டியாக நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட செயலியாகும்

    இனி உங்கள் காணாமல் போன ஆண்ட்ராய்டு சாதனங்களை கூகுள் துணையுடன் கண்டுபிடிக்கலாம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 09, 2024
    04:47 pm

    செய்தி முன்னோட்டம்

    கூகுள் தனது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Find My Device நெட்வொர்க்கை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

    இது ஆப்பிளின் ஃபைண்ட் மை அம்சத்திற்கு போட்டியாக நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட செயலியாகும்.

    கடந்த ஆண்டு I/O நிகழ்வில் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் தொழில்நுட்பம், தொலைந்து போன அல்லது திருடப்பட்ட ஆண்ட்ராய்டு சாதனங்களைக் கண்டறிய உதவும்.

    ஒரு பில்லியனுக்கும் அதிகமான ஆண்ட்ராய்டு சாதனங்களைக் கொண்ட கிரவுட் சோர்ஸ் அமைப்பைப் பயன்படுத்தி இதை செய்யவுள்ளது கூகுள்.

    இந்த அம்சம், பயனர்கள் ஒரு பொருளின் இருப்பிடத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் அனுமதிக்கிறது.

    தற்போது, ​​இந்தச் சேவை அமெரிக்காவிலும் கனடாவிலும் உள்ள ஆண்ட்ராய்டு பயனர்களுக்குக் கிடைக்கிறது.

    விரைவில் உலகளாவிய ரீதியில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

    பயன்பாட்டு விவரங்கள்

    அம்சங்கள் மற்றும் செயல்பாடு

    ஃபைண்ட் மை டிவைஸ் ஆப்ஸ், நிறுவப்பட்டதும், இணக்கமான ஆண்ட்ராய்டு ஃபோன்கள் மற்றும் டேப்லெட்களைக் கண்டறிய பயனர்களை அனுமதிக்கிறது.

    அருகிலுள்ள ஆண்ட்ராய்டு ஃபோன்கள் மற்றும் டேப்லெட்களில் இருந்து புளூடூத் சிக்னல்களைக் கண்டறிந்து, காணாமல் போன சாதனத்தின் இருப்பிடத்தைக் குறிப்பதன் மூலம் இது செயல்படுகிறது.

    தொலைந்து போன சாதனங்கள் ஆஃப்லைனில் இருந்தாலும், அவற்றின் இருப்பிடத்தை ரிங் செய்து, அவற்றை வரைபடத்தில் காண்பிக்கும்படி கட்டளையிடலாம்.

    குறிப்பிடத்தக்க வகையில், பிக்சல் 8, பிக்சல் 8 ப்ரோ ஸ்மார்ட்போன்கள், சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டாலும், பேட்டரி ட்ரைன் ஆகியிருந்தாலும் கூட வரைபடத்தில் தோன்றும்.

    Find My Device சேவையானது Nest ஸ்மார்ட் ஹோம் சாதனங்களுடனும் ஒருங்கிணைக்கிறது.

    வீட்டிற்குள் ஒரு ஸ்மார்ட் டிவைஸ்-ஐ தேட வேண்டியிருந்தால், இந்த செயலி அதன் இருப்பிடத்தைக் காண்பிக்கும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கூகுள்
    ஆண்ட்ராய்டு

    சமீபத்திய

    இனியும் வெளிநாடுகளிடம் பிச்சை எடுக்க முடியாது; ராணுவ வீரர்கள் மத்தியில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் பாகிஸ்தான்
    கருக்கலைப்பு மாத்திரையைக் கண்டுபிடித்த எட்டியென்-எமிலி பவுலியூ 98 வயதில் காலமானார் பிரான்ஸ்
    ஐபிஎல் 2025 எம்ஐvsபிபிகேஎஸ்: டாஸ் வென்றது பிபிகேஎஸ்; மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    ரஷ்ய விமான தளங்களை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல்; விமானங்களுக்கு சேதம் என தகவல் உக்ரைன்

    கூகுள்

    'மேப்ஸ்' சேவை AI தொழில்நுட்பத்தைக் கொண்டு மேம்படுத்தும் கூகுள் செயற்கை நுண்ணறிவு
    'கார் கிராஷ் டிடெக்ஷன்' வசதியை இந்தியாவிலும் அறிமுகப்படுத்திய கூகுள் ஸ்மார்ட்போன்
    உளகளவில் சீனாவிற்கு மாற்றாக முக்கியமான உற்பத்தி மையமாக வளர்ந்து வரும் இந்தியா இந்தியா
    தவறான நோக்கத்துடன் தகவல் தேடுபவர்களை கண்டறிய கூகுள், யூடியூப் நிறுவனங்களின் உதவியை நாடிய சைபர் கிரைம் கேரளா

    ஆண்ட்ராய்டு

    Free Fire MAX இலவச குறியீடுகள்: மார்ச் 2, 2024  ஃபிரீ ஃபையர்
    Free Fire MAX இலவச குறியீடுகள்: மார்ச் 3, 2024  ஃபிரீ ஃபையர்
    Free Fire MAX இலவச குறியீடுகள்: மார்ச் 4, 2024  ஃபிரீ ஃபையர்
    Free Fire MAX இலவச குறியீடுகள்: மார்ச் 5, 2024  ஃபிரீ ஃபையர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025