பகவத் கீதை அடிப்படையில் கீதா GPT-யை உருவாக்கிய கூகுள் ஊழியர்!
ChatGPT என்ற செயற்கை நுண்ணறிவு பெரியளவில் வளர்ந்துவிட்டது. பிரபலமாகிவிட்ட இந்த சாட்ஜிபிடி போன்று பல செயற்கை நுண்ணறிவு தளங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கூகுள் இந்தியா மென்பொருள் உருவாக்குநரான சுகுரு சாய் வினீத் , கீதா GPT யை உருவாக்கியுள்ளார். இவை GPT-3இல் இயங்கும் திட்டமாகும், இது உங்கள் வாழ்க்கையின் கேள்விகளுக்கு தீர்வுகளை உருவாக்க பகவத் கீதையைப் பயன்படுத்துகிறது. மேலும், இதை பயன்படுத்தி, பகவத் கீதையைப் படிப்பதன் மூலம் AI சாட்பாட் பதிலளிக்கும் கேள்விகளைக் கேட்க மக்கள் கீதா ஜிபிடி பயன்பாட்டைப் https://gita.kishans.in/ இணைப்பில் பயன்படுத்தலாம். கீதா ஜிபிடியின் தனித்துவமான நன்மைகளில் ஒன்று, பயனரின் தேடல்கள், கேள்விகள் மற்றும் கோரிக்கைகளுக்கு ஏற்ப பகவத் கீதை விரிவுரைகளைத் தனிப்பயனாக்கும் திறன் கொண்டுள்ளது.