ஐபோனுக்கான கூகிள் கிரோமில் இப்போது தனிப்பயனாக்கக்கூடிய மெனு பார் அறிமுகம்
கூகுள் அதன் குரோம் ப்ரவுசருக்கான குறிப்பிடத்தக்க புதுப்பிப்பை ஐபோன் மற்றும் ஐபேடில் வெளியிட்டுள்ளது. இந்த புதுப்பிப்பில் தனிப்பயனாக்கக்கூடிய மெனு பார்-ஐ அறிமுகப்படுத்துயுள்ளது. இந்த புதிய அம்சம் பிரவுசரில் வலதுபுறத்தில் உள்ள மூன்று-புள்ளி ட்ராப்-டவுன் மெனுவில் அமைந்துள்ளது. இதில் பல்வேறு செயல் விருப்பங்கள் அடங்கியுள்ளது. புதுப்பிக்கப்பட்ட மெனுவில் "தனிப்பயனாக்கு மெனு" பட்டன் உள்ளது. இது பயனர்களுக்கு அவர்களின் பிரவுசிங் அனுபவத்தின் மீது கூடுதல் கட்டுப்பாட்டை வழங்குகிறது.
புதிய புதுப்பிப்பில் மேம்படுத்தப்பட்ட தனிப்பயனாக்குதல் விருப்பங்கள்
"Customize Menu"-வில் "Smart Sort Menu Bar" என்ற தேர்வு உள்ளது. இது "அடிக்கடி பயன்படுத்தப்படும் பொருட்களை முதலில் காட்ட" பயன்படும். புக்மார்க்குகள், பதிவிறக்கங்கள், வரலாறு, பாஸ்வர்ட் மேனேஜர், ரீடிங் லிஸ்ட், சமீபத்திய தாவல்கள், தளத் தகவல் மற்றும் புதியது என்ன உள்ளிட்டவற்றை மெனு பாரில் மாற்றிக்கொள்ள இந்த புதிய புதுப்பிப்பு பயனர்களை அனுமதிக்கிறது.