Page Loader
கூகுள் பார்ட் v/s OpenAI சாட்ஜிபிடி - சிறந்தவை எது?
கூகுள் பார்ட் மற்றும் ஓபன் ஏஐ சாட்ஜிபிடி சிறந்தவை எவை இங்கே

கூகுள் பார்ட் v/s OpenAI சாட்ஜிபிடி - சிறந்தவை எது?

எழுதியவர் Siranjeevi
Mar 23, 2023
01:14 pm

செய்தி முன்னோட்டம்

கூகுள் மற்றும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தால் உருவாக்கப்படும் AI தொழில்நுட்பமானது ஒரு புதிய போர் ஆகவே உருவாகியுள்ளது. எதிர்காலத்தில் இந்த நுண்ணறிவுகள் அனைத்திலும் இருக்கும் என்பதால் இப்போதே அதற்கான முன்னோட்டமாக இந்த கருவிகள் தென்படுகின்றன. இரண்டுமே மொழி மாதிரிகளை கொண்டுள்ளதால் அடிப்படையில் வேறுபாடுகள் மாறுபடும். OPenAI ஆனது உருவாக்க முக்கிய காரணம் டெக்னாலஜி சார்ந்து மனிதர்கள் செய்யக்கூடிய அனைத்து வேலைகளையும் இந்த AI கருவி சுலபமாக செய்துமுடிக்கும் என்பதால் தான். அறிமுகம் ஆன 1 மாதத்தில் 100 மில்லியன் பயனாளர்களை தாண்டிவிட்டது.

செயற்கை நுண்ணறிவு

Google Bard v/s OpenAI ChatGPT - எது சிறப்பாக செயல்படும்?

Google Bard ஆனது Google நிறுவனம் உருவாக்கிய கருவியே Google Bard என்று அழைக்கப்படுகிறது. எனவே, Google நிறுவனம் அதன் தனிப்பட்ட காப்புரிமை செய்யப்பட்ட மொழியை இதில் பயன்படுத்துகிறது. கூகுள் பார்ட் ஆனது, நாம் கேட்கும் கேள்விகளுக்கு LaMDA மூலமாக இணையத்தில் தேடி நமக்கு தேவையான விடை தருகிறது. இதனால் இது அதிக அப்டேட் நிறைந்தது. தற்போது கூகுள் பார்டை விட ChatGPT முன்னணியில் உள்ளது என்பது தெளிவாகிறது. சில மாதங்கள் கழித்து கூகுள் பார்ட் எப்படி இருக்கும் என்பதை பொறுத்து தான் பார்க்கமுடியும்.