அடுத்த செய்திக் கட்டுரை

கடந்த காலத்தை கண்முன் நிறுத்தும் AI கலைஞர் - அசத்தல் ஃபோட்டோஸ்
எழுதியவர்
Siranjeevi
Mar 21, 2023
05:04 pm
செய்தி முன்னோட்டம்
AI- செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மிகப்பெரியளவில் வளர்ச்சியடைந்துள்ளது. இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பல கலைஞர்களின் புகைப்படஙகளை மாற்றியுள்ளனர்.
அதாவது, மகாத்மா காந்தி, பி.ஆர்.அம்பேத்கர், அன்னை தெரசா மற்றும் எல்விஸ் பிரெஸ்லி ஆகியோர் தற்போது செல்ஃபி எடுத்துக்கொண்டால் எப்படி இருக்கும் என்பதை செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி மாற்றியுள்ளார் கலைஞர் ஒருவர்.
இப்புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதை ஜான் முல்லர் என்பவர் வெளியிட்டுள்ளார்.
Midjourney மற்றும் Photoshop-யை பயன்படுத்தி இதை செய்துள்ளார். இதனிடையே, அவரது AI-உருவாக்கிய படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, முல்லரின் கலைப்படைப்பு ஆயிரக்கணக்கான விருப்பங்களையும் கருத்துகளையும் பெற்றுள்ளது.