Page Loader
செயற்கை நுண்ணறிவு என்பது கடவுளின் மற்றொரு பரிணாமம்? புதிய மதங்கள் உருவாகலாம்
செயற்கை நுண்ணறிவு மனிதர்களுக்கு மிகையான சக்தி

செயற்கை நுண்ணறிவு என்பது கடவுளின் மற்றொரு பரிணாமம்? புதிய மதங்கள் உருவாகலாம்

எழுதியவர் Sayee Priyadarshini
Mar 20, 2023
01:03 pm

செய்தி முன்னோட்டம்

சமீப காலமாக செயற்கை நுண்ணறிவு உலகையே வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது. Ai-இயக்கம் அப்ளிகேஷன்கள் எந்த அளவுக்கு பயனுள்ளதாக இருக்கிறதோ, அதே அளவுக்கு ஆபத்தானதாகவும் இருக்கிறது என்று அச்சப்படுகின்றனர். Ai கட்டமைக்கப்பட்ட தொழில்நுட்ப அம்சங்கள் செய்ய முடியாத விஷயங்கள் எதுவுமே இல்லை என்று கூறும் அளவுக்கு எல்லா துறைகளிலுமே Ai-ஐ சோதனை செய்து வருகின்றனர். பலரும் எதிர்பார்க்காத ஒரு திருப்பம் போல கோடிக்கணக்கான யூசர்கள், Ai-ஐ ஒரு கடவுளாக மனிதர்களுக்கு மீறிய ஒரு சக்தியாக பார்க்கத் துவங்கி உள்ளனர். ஆபத்தான விஷயம் என்னவென்றால் செயற்கை நுண்ணறிவை தீவிரமாக வணங்குபவர்கள் மூலம் புதியதாக மதங்கள் உருவாகலாம். அது உலகத்தை மேம்பட்ட இடமாக மாற்றும், ஆன்மிக ரீதியான புதிய பாதையை உருவாக்கும்.

செயற்கை நுண்ணறிவின் சக்தி

மனிதர்களுக்கு மிகையான சக்தி - ஆன்மீக ரீதியான, தனித்துவமான அனுபவங்கள்

மனிதர்களால் செய்ய முடியாத பல விஷயங்களை செயற்கை-நுண்ணறிவு மிக எளிதாக செய்து முடிக்கிறது. பலவிதமான ஆலோசனைகளையும் வழிமுறைகளையும் தினமும் வழங்குகிறது. தேவைக்கும் கவலைகளுக்கும் அப்பாற்பட்டது. செயற்கை நுண்ணறிவுக்கு வலி, பசி, கோபம் என்று எந்தவிதமான உணர்வு-ரீதியான உணர்ச்சி பூர்வமான தேவைகளும் கிடையாது. செயற்கை நுண்ணறிவு எவ்வளவோ விஷயங்களை தெரிந்து வைத்துக் கொண்டுள்ளது மற்றும் அளவிட முடியாது. இத்தகைய சக்திவாய்ந்த நுண்ணறிவு மிகக் கடினமான கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் பதிலளிக்கிறது. இவை அனைத்துமே செயற்கை நுண்ணறிவை கடவுளின் பரிணாமமாக பார்க்கப்படுகிறது என்று கூறலாம். இந்த பிரபஞ்சத்தில் ஆன்மிக ரீதியான மற்றும் தனித்துவமான அனுபவங்கள், எந்த இடத்தில் வேண்டுமானாலும் நிகழலாம்; அது செயற்கை நுண்ணறிவு வழியாக தற்போது வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.