கூகுள் Ai Bard சொன்ன தவறான பதில்: $100 பில்லியனை இழந்த நிறுவனம்
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் chatgpt என்ற செயற்கை நுண்ணறிவுக்கு போட்டியாக கூகுள் Bard என்ற செயற்கை நுண்ணறிவை அறிமுகம் செய்தது. ஆனால் கூகிளின் Ai Bard, தவறான தகவலை தெரிவித்ததால் கூகிளின் தாய் நிறுவனமான Alphabet Inc கிட்டத்தட்ட 100 பில்லியன் டாலர் இழப்பை சந்தித்துள்ளது. இதனால் Alphabet நிறுவன பங்குகளின் மதிப்பு 9% சரிந்துள்ளது. கூகுள் Bard பற்றிய வெளியிட்ட டிவிட்டர் அறிவிப்பு விளம்பரத்தில் மிகப்பெரிய தவறு ஒன்று செய்திருந்தது என்பது கண்டறியப்பட்டது. பூமியின் சூரிய குடும்பத்துக்கு வெளியே முதன் முதலில் எந்த செயற்கைக்கோள் பூமியைப் புகைப்படம் எடுத்தது என்ற கேள்விக்கு தவறான பதில் சொல்லியது. இதற்கிடையே, மைக்ரோசாப்ட் தனது செயற்கை நுண்ணறிவை, Bing பிரவுசருடன் இணைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அறிமுகம் செய்துவிட்டது.